கொரோனா எதிரொலி..!  தமிழகத்தில் 9 பேர் தீவிர கண்காணிப்பு...!

தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியால் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது மதுரை கோவை, சென்னை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் சோதனை செய்ததில் 1,265 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 9 பேர் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 75 பேரின் மாதிரிகள் உடனுக்குடன் ஆய்வு செய்ததில் 73 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓமனில இருந்து வந்த நபரின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், ஒரு பக்கம் மும்முரமான விழிப்புணர்வு, மற்றொரு பக்கம் கொரோனா குறித்த பயமும் இருக்கத்தான் செய்கிறது என்கின்றனர் மக்கள் .