Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் ஏறுமுகத்தில் கொரோனா..!! அனைத்தும் முடங்கியது.

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து அங்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. 

Corona in Kerala .. !! Everything was paralyzed.
Author
Kerala, First Published Mar 28, 2020, 8:48 PM IST

T.Balamurukan

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து அங்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. 

Corona in Kerala .. !! Everything was paralyzed.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில், மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 909பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 

Corona in Kerala .. !! Everything was paralyzed.

இதுகுறித்து  முதல்வர் பினராயி விஜயன் கூறும் போது.., 'கேரளத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 பேர்கள், கொல்லம், மலப்புரம், காசராகோடு மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என 6 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வைரையிலும் மொத்தம் 165 பேர் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் விரைவில் ஆலோசனை வழங்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios