இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலியானவர் வீட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் கொரொனா தொற்று இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் செய்தியாளர்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
T.Balamurukan

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் முதல் முதலாக இறந்த முதியவரின் குடும்பத்தினரை நேர்காணல் செய்த 4 செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கொரோனா தாக்கியிருக்குமா? என்கிற அச்சம் தற்போது எழுந்திருக்கிறது.