கொரோனா பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என, மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த, விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு புறம்... பிரபலங்களும் ட்விட்டர் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, தங்களுடைய ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி, அறிவுறுத்தி வருகிறார்கள்.

மேலும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களின்  பாதுகாப்பு கருதி ஆங்காங்கு, முக கவசம், மற்றும் சானிடைசர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில், கொரோனா பாதிப்பில் சிலர் மருத்துவ மனையில் அனுபாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக நாளை... (மார்ச் 22 ) ஆம் தேதி ஊரடங்கு உதவரை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்றய தினம் பேருந்துகள் ஓடாது என்றும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதால், வீட்டுக்கு தேவையான பொருட்களை இப்போதே வாங்கி வைத்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்... சென்னை,மேட்டுப்பாளையம், பெரம்பூர்,பகுதி மக்கள் இயற்க்கை கிருமி நாசினியான மஞ்சள் மற்றும் வேப்பிலையை கையில் எடுத்துள்ளனர். தங்களையும், தங்களுடைய குடும்பத்தினரையும், காப்பாற்றும் நிலையில்...  ஊர் முழுவதும், வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன் மூலம்... நம், முன்னோர்கள் பணயன்படுத்திய இயற்க்கை முறையை மீண்டும் கையில் எடுத்துள்ளனர் நம் மக்கள்.