தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், நாம் வாழும் வாழ்கையில் எவ்வளவு முனேற்றம்  வந்தாலும் நம் மனது எப்பொழுதும் சிலதை மட்டும் ஆணித்தரமாக நம்பும்..அதற்கு எடுத்துகாட்டாக  நாள்  நட்சத்திரம், நேரம் என அனைத்தும்   சொல்லலாம் .அதனால் தான் திருமணம் செய்ய முடிவு செய்தாலும், பொருத்தம் பார்க்கின்றனர் நம் மக்கள். அந்த வரிசையில்  தற்போது பெண்கள் பிறந்த மாதத்தை  வைத்து   அவர்களுடைய குண நலன்களை பார்க்கலாம்.

ஜனவரி: போர்ஆர்வம் உள்ளவர்கள்,சீரியசாக யோசிப்பவர்கள்,உணர்வுகளை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும்  வெளிப்படுத்த மாட்டார்கள்,அவர்கள் இயல்பை உணர்ந்த  நபர்களிடம் மட்டும் பழகுவார்கள்.

பிப்ரவரி: அடிக்கடி மன நிலைமை மாறும் இவர்களுடன் பழக கூட பொறுமையாகதான் பழக முடியும் ஆனால் ரொமான்டிக்காக  இருப்பார்கள்.

மார்ச்; பழக எளிமையானவர்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும், நேர்மையானவர்கள், இவர்கள் எளிதில் காதல் செய்து  விட  மாட்டார்கள்.

ஏப்ரல்; அனைவரிடமும் எளிதாக  பழகும் தன்மை உடையவர்கள் பொறாமை குணம் இருக்கும். தாங்கள் யாரை  நம்புகிறார்களோ, அவர்களிடம் மட்டும் தான் ஓபனாக பேசுவார்கள்.

மே; விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். தனிக் கோட்பாடுகள் வைத்திருப்பார்கள் இவர்களுடன்  எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.

ஜூன்; அதிக ஆர்வம் கொண்டவர்கள், கற்பனை திறன் அதிகம் கொண்டவர்கள் , நாம் சொல்ல வந்ததை, அவர்களே கண்டுப்பிடித்து விடுவார்கள்,இவர்களிடம் ஒளிவு மறைவு இருக்காது.

ஜூலை; நேர்மை, அறிவு, அழகு நேர்மை கொண்டவர்கள் அமைதியான  வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்.

ஆகஸ்ட்; தனித்துவம்  மிக்கவர்கள் , அதிக தன்னம்பிக்கை ,நல்ல  உள்ளம்  கொண்டவர்கள் ,நகைச்சுவை உணர்வு  உள்ளவர்கள்.

செப்டம்பர்; அன்பு கட்டுப்பாடு,அழகு மூன்றும் கலந்த கலவை யாரையும் எளிதாக மன்னித்து விடமாட்டார்கள்.
யாராக  இருந்தாலும் இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும் . யாருக்கும் துரோகம் நினைக்க மாட்டார்கள். எளிதில் அனைவரையும் எடை போட்டு விடுவார்கள் ,குறுகிய கால உறவு இவர்களுக்கு பிடிக்காது.

அக்டோபர் ;  உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.

நவம்பர்; என்றும் ஒருபடி மேலே தான்  இருக்க  விரும்புவார்கள் பொய்களை ஒரு நொடி பொழுதில் கண்டுப்பிடித்து விடுவார்கள்
உண்மையாக  வாழ்பவர்கள்... உண்மையை  மட்டும்  விருப்புபவர்கள்.

டிசம்பர் ;   பொறுமை  இருக்காது வெற்றியை  எளிதில்  எண்ணுவார்கள். ஓபன்  டைப்பாக  இருப்பார்கள்.  நினைத்ததை எளிதில் அடைவார்கள் ,

நீங்கள்  எந்த மாதம் பிறந்தவர்கள்?  உங்கள்  தோழிகள்  எந்த  மாதம்  பிறந்தவர்கள்  என்பதை  மனதில் கொண்டு  அவர்களின்  இயல்புகளை புரிந்துக்கொள்ளுங்கள் .