நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருந்த உருளைக் கிழங்கை சாப்பிடலாமா?

உருளைக் கிழங்குகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து சமைக்கலாம் என்கிற புரிதல் பரவலாக உள்ளது. அவசரத் தேவைக்கும் அல்லது நேரத்துக்குள் சமைக்க வேண்டும் என்கிற போது, கைக்கொடுக்கிறது உருளைக் கிழங்கு. ஆனால் இப்படி நீண்ட நாட்கள் வைத்திருக்கப்படும் உருளைக் கிழங்கு முளை விட்டுவிடும். அப்படிப்பட்ட உருளைகளை சமையலுக்கு பயன்படுத்தலாமா என்கிற பொது விவாதம் இன்றும் நமது வீடுகளில் காணப்படுகிறது. சிலர் அப்படி முளைவிட்ட உருளைகளை சாப்பிடக் கூடாது என்று சொல்கின்றனர். இன்னும் சிலரோ முளை விடுவது கிழங்கின் இயற்கை, அதை சமைத்து சாப்பிடுவதால் ஒன்றுமாகிவிடாது என்று கூறிகின்றனர். இதில் எது உண்மை என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் தெரிந்துகொள்ள இப்பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 

Can you eat Potato that have not been cooked for a long time?

நச்சுத்தன்மை உண்டு

தக்காளி மற்றும் கத்திரிக்காயில் இடம்பெற்றுள்ள கிளைக்கோ ஆல்காய்டு என்கிற வேதியல் உருளைக் கிழங்கிலும் காணப்படுகின்றன. இது குறைவான அளவில் இருக்கும் போது, மனித உடலுக்கு நன்மையை தரும். ஆனால் முளை விடும் உருளைக் கிழங்குகளில் இவ்வேதியல் அதிகம் காணப்படுகின்றனர். கிளைக்கோ ஆல்காய்டை அதிகளவில் உட்கொள்ளும் போது அவை  நச்சுகளாக மாறிவிடுகின்றன. இதுபோன்ற உருளைகளை உணவாக சாப்பிடும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் கிளைக்கோ ஆல்காய்டு அதிகமாகக் கொண்ட உருளைக் கிழங்குகளை சாப்பிடுவதால், குழந்தைக்கு பிறப்பு குறைபாடு தோன்றும் வாய்ப்புள்ளது. அதனால் முளைவிட்ட உருளைக் கிழங்குகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளக் கூடாது.

வேக்காடு, பேக்கிங் இரண்டுமே ஆபத்து

முளை விட்ட உருளைக் கிழங்குகள் மட்டுமில்லாமல் பச்சை நிற உருளைகள் மற்றும் கசப்பு சுவைக் கொண்ட உருளைக் கிழங்குகளிலும் இந்த வேதியல் பொருள் உள்ளது. அதனால் முளை விட்ட பகுதி, கிழங்கின் கண் பகுதி மற்றும் சேதமடைந்த பாகம் ஆகியவற்றை நீக்கிவிட்டு சாப்பிடுவதால் கிளைக்கோ ஆல்காய்டு பாதிப்பு குறைக்கிறது. அதேபோல உருளைக் கிழங்கின் தோலை உரித்துவிட்டு வேகவைப்பது, பேக்கிங் செய்வது , மைக்ரோவேவில் சமைப்பதைக் காட்டிலும், அதை டோஸ் செய்து பயன்படுத்துவது நல்லது என்று தேசிய கேபிடல் பாய்சன் சென்டர் பரிந்துரைக்கிறது.

இரும்பு சத்தை அதிகரிக்கும்..சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி? நாக்கில் எச்சில் ஊற வைக்கும் டேஸ்ட் ..
 

தேவைக்கு ஏற்ப வாங்குங்கள்

மிகவும் மலிவாக கிடைக்கிறதே என்றோ அல்லது மொத்தமாக வாங்கி வைக்கலாம் என்று எண்ணத்திலோ உருளைக் கிழங்குகளை வாங்குவதை தவிருங்கள். தேவைக்கு ஏற்ப வாங்கிப் பயன்படுத்துவது தான் சரி. எப்போதும் உருளைக் கிழங்கை குளிர்ச்சியான அல்லது இருட்டான இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயத்துடன் எப்போதும் உருளைகளை வைக்கக்கூடாது. அப்படி செய்வதால், அது சீக்கரத்திலேயே முளை விட்டுவதாக கூறப்படுகிறது. அதேபோன்று குளிர்ச்சியான இருட்டான இடத்தில் வைப்பதால் உருளைகள் முளை விடுவது தடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mushroom Side Effects: காளான் உடலுக்கு நல்லது தான்..ஆனால், அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை இருக்கா..?
 

தோல் உரித்துப் பயன்படுத்துங்கள்

முளைவிட்ட உருளைக்கிழங்கில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உருளைக் கிழங்கில் தோலில் தான் கிளைக்கோ ஆல்காய்டு வேதியல் அதிகளவில் உள்ளது. அதனால் எப்போது தோலை உரித்து பயன்படுத்துங்கள். தோலுடன் சேர்த்து கிழங்குகளை வேகவைப்பது, ஆவியில் வைத்து எடுப்பது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios