ட்விட்டரை மெர்சலாக்கிய பிரியாணி சமோசா! எப்படி இருக்கு பாருங்க!
ட்விட்டரில் பிரியாணியை உள்ளே வைத்து செய்யப்பட்ட பிரியாணி சமோசா பற்றிய பதிவு வைரலாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அதைப்பற்றி சுவாரஸ்யமான கருத்துகளைக் கூறிவருகிறார்கள்.
விதவிதமான சமோசாவை சுவைத்துப் பார்த்திருப்போம். பிரியாணி சமோசா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரியாணியை உள்ளே வைத்து அதை சமோசாவாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று தெரியுமா?
ட்விட்டர் பயனர் ஒருவர் ஸ்ரீநகரில் உள்ள கிளவுட் கிச்சன் என்ற உணவகத்தில் தயாரித்த பிரியாணி சமோசாவின் படத்தைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வைரலானதை எடுத்து உணவுப் பிரியர்கள் பலரும் தங்கள் கருத்தைக் கூறி வருகின்றனர்.
சிலர் இந்த சமோசா விநோதமாக இருப்பதாகவும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் சொல்கின்றனர். இன்னும் சிலர் இந்த வித்தியாசமான ஐடியாவைக் கண்டு ஆச்சரியப்பட்டு தாங்களும் பிரியாணி சமோசா சாப்பிட விரும்புவதாக கூறுகின்றனர்.
4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை படைத்த சிறுவனம்! 1000 பிரதிகளைத் தாட்டி விற்பனை
"இந்தப் படம் என் வாயில் எச்சில் ஊற வைக்கிறது. நிச்சயமாக நானும் இதை முயற்சி செய்துபார்ப்பேன்" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு சமையல் கலைஞரும் இந்த பிரியாணி சமோசாவை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
ட்விட்டரில் உள்ள உணவுப் பிரியர்கள் புதுமையான சமோசா பற்றி பதிவிடுவது முதல் முறையல்ல. டிசம்பர் 2021 இல், குலாப் ஜாமுன் சமோசா பற்றிய பதிவு இன்ஸ்டாகிராமில் வெளியானது. மே 2020 இல், நூடுல்ஸ் பிரியாணி பற்றிய பதிவு வெளியாகி வைரலானது.
சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படை