ஒரே தீர்வு "வீட்டில் இருப்பதே"..! விளையாட்டாக எடுத்துக்காதீங்க மக்களே..! இதை படிங்க மக்களே.! 

பரபரபாக இயங்கி கொண்டிருந்த நாடு... இப்போ கொஞ்சம் கூட சத்தம் இல்லாத அமைதியான ஒரு சூழல் உருவாகி உள்ளது என்றால் அதற்கு காரணம்.. கொரோனா என்ற வைரஸ் மட்டுமே..

இந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து மக்களை வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத ஒரு  சூழலை உருவாக்கி உள்ளது என்றால் கொரோனாவின் தீவிரம் எப்படி என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.... 

சீனாவில் முதன் முதலில் ஹுவாங் மாகாணத்தில் கொரோனா தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அங்கு மக்கள் மெல்ல மெல்ல பாதித்ததை எங்கோ நடக்கிறது என நாம் அனைவரும், சாதாரண செய்தியாக பார்த்தோம்.. ஆனால் அதன்  விளைவு இன்று வரை உலகம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் . 

இந்த ஒரு தருணத்தில், இந்தியயாவில் 250 கும் அதிகமானோர் கொரோனாவால் பாத்திருக்கப்பட்டு 5 பேர் வரை பாலியாகி உள்ளனர். இப்படியே சென்றால் நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த நிலையில் இதனை எப்படி கட்டுப்படுத்துவது என பல வழிகளில் யோசனை செய்த மத்திய,மாநில அரசு நாட்டு மக்கள்  நலனுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதில் மிக முக்கியமான ஒன்று தான் "மக்கள் ஊரடங்கு" .நாளை நாடு முழுவதும் இதனை கடைபிடித்தால்  பெரும் நன்மை ஏற்படும். அதாவது கொரோனா வைரஸ் காற்றில் 3 மணி  நேரம் வாழக்கூடியது. மற்ற பொருள்களில், மக்கள் பயணம் செய்யும் வாகனம் முதல் பேருந்து, ரயில், விமானம், பொதுவெளியில் நாம்  தொட்டு பார்த்தது... நம் கைகள் பட்ட இடம்,கொரோனா பாதித்தவர் தும்பி இருந்தால் அவர்கள் மூலமாக  காற்றில் கலந்துள்ள கொரோனா வைரஸ் என அனைத்தும் அழிக்க ஒரே ஒரு வழி நம் வீட்டில்   தனிமைப்படுத்திக்கொள்வதே நல்லது.

நாளை மக்கள் ஊரடங்கு என்பதால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் போது வெளியில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தானாகவே எந்த கிருமிநாசினியும் அடிக்காமல்அதனை அழித்து விட முடியும்." break the chain" என்ற முறையில் கொரோனா பரவுதலை  கட்டுப்படுத்த முடியும். 

எனவே மக்களாகிய நாம் நம்மை நாமே "தனிமையாக்கி" கொள்வது  நல்லது. இதனை யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாதிக்கப்பட்ட சீனா, இத்தாலி  மக்கள் வெளியிடும் வீடியோவை பார்த்தால்  நமக்கு இருக்கக்கூடிய தைரியமே இன்னமும் குறைந்து விடும்.

எனவே வருமுன் காப்பது சிறந்தது என்பது போல, அனைவரும் ஒத்துழைத்து இப்போதே கொரோன வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம்.