உடல் எடை குறைய பீட்ரூட்மட்டும் போதும்...! அப்படி என்ன இருக்கிறது தெரியுமா..?  

நம் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்கும் பீட்ரூட் எந்த அளவிற்கு நல்ல பலனை தருகிறது என்பதை தெரிந்துக்கொள்ள இந்த பதிவை படியுங்கள். 

பீட் ரூட் பார்ப்பதற்கே மிக அழகான  கலர் கொண்டது. பார்க்கும் போதே அப்படியே சாப்பிடலாம் போல தோன்றும்..அதுமட்டுமா..? இனிப்பு சுவையும் கொண்டது அல்லவா..? இப்படிப்பட்ட பீட் ரூட்டை பொரியல் மட்டும் செய்து சாப்பிடுவதை விட கீழ் குறிப்பிட்டு உள்ளவாறு கூட பயன்படுத்தி வந்தால், ஒரே வாரத்தில் கட்டாயம் உடல் எடை குறையுமாம்.

பீட்ரூட்டில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து உள்ளிட்டவை உள்ளன. 

மாதுளை மற்றும்  பீட்ரூட்

இரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் நலன்கள் அதிகம். அவை மாதுளையும், பீட்ரூட்டும். மாதுளை மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து சிறிது நீர், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவற்றில் உள்ள பி-காம்ப்ளெக்ஸ் செரிமானத்தை சீராக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும். 

பீட்ரூட் மற்றும் கேரட்

கேரட், புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும். 

ஆப்பிள் மற்றும் பீட்ரூட்

இரண்டிலுமே மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து தேவைக்கேற்ப சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். சிறிது இலவங்க பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி குடித்தால் ஒரு மாதத்தில் எடை குறையும்.

தக்காளி மற்றும் பீட்ரூட்

அதிக நிறங்கள் கொண்ட பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம். தக்காளி, பீட்ரூட் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளன. தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்

பீட்ரூட்
 
இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும். சோர்வாக இருப்பவர்களுக்கு அற்புதமான மருந்து இதய ஆரோக்கியத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பை தரும். புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். நீண்ட காலம் இளமையாக இருக்க பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தாலே போதும்.

பீட் ரூட்டை இனி மறக்காம சாப்பிடுங்க....