சொல் பேச்சை கேட்காமல் ... பிறகு அரசை குறை சொல்ல கூடாது..!

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி நம்மை தனிமைப் படுத்திக் கொள்வது என அனைவரும் புரிந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக நாளை "மக்கள் ஊரடங்கு உத்தரவு"பிறப்பித்து இருப்பதால் யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் வெளியில் வரக்கூடாது என்றும் எந்த ஒரு சேவையும்நாளை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இன்றே வாங்கி வீட்டில் வைத்து விட்டனர் மக்கள். நாளை மக்கள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அதனை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இல்லை எனில்  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

காரணம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான 14 மணி நேரத்தில் காற்றில் கலந்துள்ள வைரஸ், நாம் பயணித்த, தொட்டு.. பேசிய என வெளியில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் இருந்தாலும் அழிந்துவிடும் என கருதப்படுகிறது. "மக்கள் ஊரடங்கு" வெற்றி பெறும் தருவாயில் அடுத்தடுத்த சில நாட்களுக்கும் இதை கடைப்பிடித்தால் வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவே அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் மக்களாகிய நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்.

இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் தான். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடிய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்து உள்ளார். 

அரசு எடுக்கும் முடிவுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் எதையும் சாமளிக்க முடியும். அரசு சொல்வதை கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு வெளியில் சென்றால் ஏற்படும் விளைவுகளுக்கு  அரசை குறை சொல்வது தவறு