கொழுப்பை குறைப்பது முதல் சர்க்கரை நோய் வரை கட்டுக்குள் கொண்டு வரும் கஷ்கொட்டையின் எக்கச்சக்க நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கஷ்கொட்டை (Chestnuts) என்பது குளிர்காலத்தில் கிடைக்கும் ஒரு அற்புத பழமாகும். வெளியே கருப்பாகவும் உள்ள வெண்மையாகவும் இருக்கும் இந்த பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும். இதுதவிர, உடல் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்குகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இது வெறும் பழமாக மட்டும் சாப்பிடப்படுவதில்லை பெரும்பாலானோர் கஷ்கொட்டை மாவில் ரொட்டி செய்தும் சாப்பிடுகிறார்கள்.
கஷ்கொட்டையில் கொழுப்பு இல்லை. நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6, தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கஷ்கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் :
1. செரிமானத்தை மேம்படுத்தும்
கஷ்கொட்டையில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது செரிமானத்தை துரிதப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை திறம்பட தடுக்கிறது.
2. எலும்பு இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் :
கஷ்கொட்டையில் பொட்டாசியம், துத்தநாகம், தாமிடம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்தும், உடலில் இரத்த ஓட்டத்தின் வேகத்தை ஒழுங்குபடுத்தி, இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும் மற்றும் மூளை கூர்மையாக செயல்பட உதவும்.
3. சருமம் மற்றும் முடிக்கு :
கஷ்கொட்டை சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து சருமம் வறண்டு போகாமல் தடுக்க உதவுகிறது. இதுதவிர இது உச்சந்தலையில் இருக்கும் பிரச்சனைகளை நீக்கி முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி ;
கஷ்கொட்டையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
5. சர்க்கரை நோய் :
கஷ்கொட்டையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இது தவிர கிளைசெமிக் குறியீடும் ரொம்பவே கம்மி. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கஷ்கொட்டை வரப்பிரசாதமாகும். இது தவிர இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும்.
6. கொலஸ்ட்ராலை வெளியேற்றும் :
இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய பிரச்சினை ஏற்படும். மேலும் இந்த கொலஸ்ட்ரால் க்ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்யும். கஷ்கொட்டையில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து, இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
பிற நன்மைகள் :
- கஷ்கொட்டையில் கலோரிகள் மிகவும் குறைவும். எனவே இது எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்லது.
- உயர் இரத்த அழுத்தத்தை குறிக்ந்க இது உதவுகிறது.
- கஷ்கொட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் அது புற்றுநோயை குறைக்க உதவும்
- இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி6 மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
- இதில் நல்ல அளவு அயோடின் இருப்பதால் தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
- இறந்த செல்களை சரி செய்து வீக்கத்தை குறைக்க இது உதவும்.


