22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு.... மக்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் ..! பிரதமர் சொன்னது என்ன?

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று உரை நிகழ்த்தினார் 

அப்போது...

"வரும் வாரங்களில் தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்... முடிந்தவரை வேலையையும் வர்த்தகத்தையும் வீட்டிலிருந்தவாறே நடத்திக் கொள்ளுங்கள்

"மக்கள் ஊரடங்கு"

மார்ச் 22ஆம் தேதி யாரும் வெளியில் வர வேண்டாம். "மக்கள் ஊரடங்கு" என்ற நடைமுறையை பின்பற்றுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.

உலகப்போரை விட கொடியது கொரோனா..!

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். உலகப் போரை விட மிகவும் கொடியது கொரோனா. இரண்டாம் உலகப் போரின் போது கூட நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

நன்றி செலுத்துங்கள் - 5 மணிக்கு "கை தட்டி" ஒலி எழுப்புங்கள் 

நெருக்கடியான நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் செய்வோர் மீது அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது
மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைவரும் வெளியில் திரண்டு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டி ஒலி எழுப்ப வேண்டும்.

பொது சேவை செய்யும் நபர்களுக்கு இந்த நாடு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. போலீசார், ரயில்வே துறையினர், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் பொது சேவை செய்கிறார்கள்

மருத்துவமனைக்கு செல்வோர்..! 

வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் மிகவும் தேவை என்றால் குடும்ப மருத்துவரிடம் அவரிடம் தொலைபேசி வழியாகவே ஆலோசனை பெறலாம்.

நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு..!

நமது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து இருக்கிறது. வரும் நாட்களில் வேலைக்கு வர முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தி விட வேண்டாம்.

தட்டுப்பாடு..!

பால் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும். அவசரஅவசரமாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். வழக்கமான முறையில் கடைகளில் பொருட்களை வாங்கினால் போதுமானது.

இந்த நெருக்கடியில் உறுதியோடு கொரோனாவை சந்திக்க நாம் சபதம் ஏற்போம். வரும் நாட்களிலும் நீங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் இதே முறையில் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன். கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.

தனிமைப்படுத்துதல் 

மக்களை தனிமைப்படுத்துவது மூலமே கொரோனாவை கட்டுக்குள் வைக்கமுடியும். உலகளாவிய அளவில்  இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. இவ்வாறு பேசி உள்ளார்