ட்விட்டரில் அதிரடி கிளப்பிய நடிகை பிரணீதா..! இந்துமதம் என்றால் சும்மாவா..? 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அது இந்தியாவையும் தற்போது மெல்ல மெல்ல பாதித்து வருகிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

கொரோனா பரவும் வேகமும் சற்று குறைவாகத்தான் உள்ளது. அதற்கு காரணம் நாம் வாழும் வாழ்க்கை முறை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது குறித்து உலகம் முழுவதுமே பேசி வந்தாலும்.. ஒருகாலத்தில் தமிழர்களின் பெருமையும், கலாச்சார தொடர்பான விஷயங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத உலக மக்கள் தற்போது இந்தியர்களின் உணவு பழக்கவழக்கங்களும் கலாச்சார முறைகளையும் பின்பற்ற தொடங்குகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரணிதா, "இந்துக்கள் கைகூப்பி வணக்கம் சொன்னதை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர். கை கால்களை கழுவி வீட்டிற்குள் நுழைந்தபோது மற்றவர்கள் சிரித்தனர். விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். சைவ உணவு சாப்பிடுவதையும் யோகா செய்வதையும் பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை  எரித்தால், அதையும் பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்குள் நுழையும் போது குளித்து விட்டுதான் நுழையவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள். இப்போது யாரும் சிரிக்கவில்லை.... அனைவரும் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

மேலும்இந்த பழக்க வழக்கம் தான் கொரோனா பரவுவதைத் தடுக்கிறது .இது மதம் அல்ல. வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய வழி என குறிப்பிட்டுள்ளார் பிரணிதா. இவருடைய இந்த சமூகவலைத்தள பதிவை அனைவராலும் பகிரப்பட்டு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இவருடைய இந்த கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்து உள்ளது.