இறக்கும் நாளில் கூட ... தன் கடமையை கடமையை செய்த நடிகர் சேது...!

பிரபல நடிகரும் தோல் மருத்துவருமான சேதுராம் இறப்பு எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பேரிழப்பாக உள்ளது. 35 வயதில் மாரடைப்பு என்றால.... துவும் ஒரு மருத்துவருக்கு ? அதுவும் உடலை கட்டுக்கோப்பாக  வைத்திருக்கும் ஒரு நபருக்கு என்றால்... எத்தனை கேள்விகள் எழுகிறது அல்லவா ..?

காஸ்மெட்டாலாஜிஸ்ட். இவர் படிக்கும் போதே.. எதிர் காலம் குறித்த  மிக அழகான கனவுகளோடு வாழந்தவர். அதனால் தான் மக்கள் பொதுவாகவே தம்மை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பதனை புரிந்துகொண்டு தோல் மருத்துவத்திலும் அழகு குறித்த அனைத்து விதமான படைப்புகளிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதற்காகவே  ஆஸ்திரேலியா லண்டன், அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்று, அவருடைய துறையில்  அட்வான்ஸ்டு லெவல் படிப்பு குறித்தும்.. புதியபடிப்புகள் குறித்தும் ஆராய்ந்து வந்துள்ளார். அதன் விளைவாக தான்.... சமீபத்தில் சென்னையில் மட்டும் தனது 3 மருத்துவ கிளைகளை தொடங்கினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவர் இறக்கும் நாளில் விழிப்புணர்வு வீடியோ செய்து வந்துள்ளார். மேலும் இரண்டு முறை நடைப்பயிற்சி செய்துள்ளார். எந்த ஒரு நேரத்திலும் நடைப்பயிற்சி செய்வது மட்டும் தவறவே விட மாட்டாராம். அந்த அளவுக்கு கடமையில் கருத்தாக இருந்துள்ளார் சேது 

எந்த ஒரு செயலையும் மிக விரைவாக செய்து முடிக்கும் நடிகர் சேதுராமனுக்கு நடிப்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்..

சமீபத்தில் கூட வெப் சீரிஸில் ஹீரோவாக  நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒரு பக்கம்  மருத்துவ துறை இன்னொரு பக்கம் நடிப்பு என மிகவும் பிசியாக இருந்த சேது. இன்று ஒரே அடியாக ஓய்வு எடுத்துள்ளார்.. அவருடைய மரணம் அனைவராலும் பேசும் விஷயமாக மாறி உள்ளது.காரணம்... இளம் வயது மரணமே....