கோவா பயணம் செய்பவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! 3 கிலோ வெங்காயம் பிரீ..! 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்த நிலையில், ஒரு முன்னணி ஆன்லைன் பஸ் டிக்கெட் நிறுவனம், கோவா பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு 3 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது 

இந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய  டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வெங்காயம் பரிசு பெப்ருவது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 10 ம் தேதி சலுகை வழங்கப்பட்டதிலிருந்து 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெங்காயத்தை பரிசாகத் தேர்ந்தெடுப்பதில் ஆவலாக இருந்துள்ளனர். அதாவது கோவா செல்வதை விட வெங்காயம் கிடைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் 20 அதிர்ஷ்ட வெற்றியாளர்களை அறிவித்து, அவர்களின் வீடுகளுக்கு ‘ஜாக்பாட்’ (3 கிலோ வெங்காயம்) வழங்குகின்றனர். டிசம்பர் 15 ஆம் தேதி வரை தேதி நேரம் கொடுத்து முன்பதிவு செய்து வெங்காயத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதற்கிடையில், எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால், அப்போது வெங்காய விலை குறைந்து கிலோ ரூ. 25 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயம் விலை உயர்வை காரணம் காட்டி பல்வேறு நபர்கள் டிக்டாக் மூலமாகவும், சில நிறுவனங்கள் வெங்காய சலுகை வழங்கியும் வருவதை பார்க்கும் போது மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது.