5000 ஒட்டகங்களை குறி பார்த்து சுட்டுக்கொன்றது ஆஸ்திரேலியா..! வறட்சி எதிரொலி... 

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட தீயில் கருகி பல கோடிக்கணக்கான உயிரினங்கள் பலியான சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எங்கு பார்த்தாலும் தப்பித்து ஓடும் உயிரினங்கள், தாகத்திற்காக மனிதர்களை எதிர் நோக்கி பார்க்கும் கரடி குட்டிகள், உயிரை மாய்த்துக் கொண்ட கங்காரு என சொல்லிக் கொண்டே போகலாம். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் வேகமாக பரவி வந்த காட்டுத்தீ காரணமாக யாரும் நினைத்து பார்க்க கூட முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ்,விக்டோரியா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உஷ்ண நிலை அதிகரித்தது. இந்த தீயில் கருகி பல மின் நிலையங்களும் பழுதடைந்து விட்டது. நிலைமையை சமாளிப்பதற்காக 3000 ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 1500க்கும் மேற்பட்ட வீடுகளும் நாசம் அடைந்தது. இதன் காரணமாக இவர்களுக்கு உதவி புரிய உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தன்னார்வலர்கள் ஆஸ்திரேலியாவிற்கு விரைந்தனர்.

ஆஸ்திரேலியா காடுகள் 5.8 ஹெக்டேர் அளவுக்கு தீப்பிடித்து எரிந்ததால் அதில் கருகி உயிரிழந்த பல விலங்குகளின் போட்டோக்களை பார்க்க முடிந்தது. இந்த ஒரு தருணத்தில் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தற்போது ஆஸ்திரேலிய அரசு 5 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொன்று அழித்தது.

ஹெலிகாப்டரில் இருந்து குறிபார்த்து சுடுபவர்களை கொண்டு காடுகளில் இருந்த ஐந்தாயிரம் ஒட்டகங்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை விட ஒரு சோகமான காலம் வர முடியுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இன்று இது விலங்குகளுக்கு..! நாளை மனிதர்களுக்கு.... வேறு ஏதாவது ஒரு ரூபத்தில் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்த  தன்னார்வலர்கள் இப்போதே உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்றும் காசு படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.