பாம்பே பதில் பாம் என எழுதிய மூதாட்டி..! ஸ்தம்பித்து போன விமான  நிலையம்..!

மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற மூதாட்டி ஒருவர், தன்னுடைய பார்சல் ஒன்றில் பாம்பே என்பதற்கு பதில், பாம் என எழுதியதால், சர்ச்சை எழுந்துள்ளது

பாம் டூ பிரிஸ்பன்

இந்த மூதாட்டி தான் வைத்திருந்த பெரிய கருப்பு நிற பார்சலில் "BOMB TO BRISBAIVE"  என எழுதியுள்ளார்.

அதாவது,பாம்பேஇலிருந்து பிரிஸ்பேவிற்கு பாம் அனுப்பப்பட்டுள்ளது என்பது பொருள் படுகிறது.

ஆனால் பாம்பே விலிருந்து பிரிஸ்பேவிற்கு  கொண்டுவரப் படுகிறது  எம்பதை யாரும்  புரிந்துகொள்ளாமல், அதற்லு மாறாக  அது  பாம் என பயந்து பிரிஸ்பே விமான  நிலையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனை கண்ட, சக பயணி ஒருவர் விமான நிலையத்தில் புகார் அளிக்க,அந்த மூதாட்டியை அழைத்து விசாரணை செய்து, அதில் சோதனை செய்த பின்னர்தான் தெரிய வந்துள்ளது.

அவர் பாம்பே என்பதற்கு பதிலாக பாம் என எழுதியதாகவும்,அதன் அருகில் சிறிய எழுத்துகளில் மும்பை என எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மகள் பிறந்தநாளுக்கு, அவர்களுக்கு தெரியாமல் புதிய ஆடை எடுத்து பார்சல் செய்து  எடுத்து வந்துள்ளார் அந்த மூதாட்டி. மேலும் அவருக்கு அடிக்கடி மறதி என்பதால்,இவ்வாறு எழுதி கொண்டு வந்துள்ளார் அந்த மூதாட்டி.

இதன் பின்னர் தான் அந்த மூதாட்டியை அவர்கள் விடுவித்து உள்ளனர். இதன் காரணமாக சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி  உள்ளது.