இந்த ஆண்டு இறுதிக்குள் இயற்கை சீற்றத்தால் ஏதாவது ஒரு பக்கம் அலைவு இருக்கும் என பலரும் பல விதங்களில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேலும் பல தகவல்கள் உலக அழிவை குறிக்கும் வகையில் உள்ளது என கூறப்படுகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஒரு சிவன் மலை உள்ளது. இந்த சிவன் மலை மீது அமைந்துள்ளது தான் சுப்ரமணிய சாமி திருக்கோயில்.இந்த கோவிலில் ஒரு கண்ணாடி பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கோவில் பெட்டியில் வைக்கப்படும் பொருளை பொருத்து சில விஷயம் அப்படியே நடைப்பெறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் உள்ள மூலவரின் கனவில் அந்த பெட்டியில், எந்த பொருளை வைக்க வேண்டும் என ஆண்டவர் கட்டளை இடுவாராம். அதற்கேற்றவாறு, இதற்கு முன்னதாக உவர் நீர் அந்த பெட்டியில் வைத்து உள்ளார். அதன் பின் தான் சுனாமி ஏற்பட்டு உள்ளது.

அது போல தற்போது போமி உருண்டையை அந்த பெட்டிக்குள் வைக்க ஆண்டவர் கனவில் வந்து சொன்னத்தால், உலக உருண்டையை அந்த பெட்டிக்குள் வைத்து உள்ளனர். எனவே இது அழிவிற்கான தொடக்கமா என பலரும் அப்பகுதியில் பேசிக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது 

அதே சமயத்தில், வரும் ஆண்டு 2019, பிப்ரவரி 1 ஆம் தேதியன்று  இயற்கை சீற்றம் ஏற்பட  வாய்ப்பு உள்ளது என அறிவியல் ரீதியாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.