மேற்கு வங்காளத்தில் 110 வயதுடைய மூதாட்டிக்கு புதியதாக பல், தலைமுடி வளர்ந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இன்றைய காலக்கட்டத்தில் எல்லா வசதியும் இருந்தும் மனிதனிடம் வாழ்க்கை மீதான நாட்டம் குறைவாகவே உள்ளது. அற்ப காரணங்களுக்காக பதற்றம் அடையும் பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் மக்களிடையே காணப்படுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் வயதான பெண்ணுக்கு ஒருத்தியின் வாழ்க்கை மீதான ஆர்வம் உங்களை வியக்கவைக்கும். அண்மையில் அவர் தனது 110வது வயதில் பிறந்த நாளைக் கொண்டாடினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மூதாட்டிக்கு புதிய பல் 

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில், இந்த முதிய வயதிலும் அவருக்கு புதிய முடி வளர்ச்சி உள்ளது. அதுமட்டுமில்லாமல் புதியதாக பற்கள் முளைத்திருக்கின்றன. இது அனைவரையும் வியக்க செய்தது. இந்தச் சம்பவம் மேற்கு வங்கம், ராமச்சந்திராபூரில் உள்ள பட்ஜ் என்ற பகுதியில் நடந்துள்ளது. சகிபாலா மொண்டல் (Sakhibala Mondal) என்ற மூதாட்டி தான் அந்த அதிசய மனிதர். இவரின் 110ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மூதாட்டியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சகிபாலாவுக்கு 80 வயதில் மகள் உள்ளார். இவருக்கு பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி உள்பட பிற குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். குழந்தைகளுக்கு பல் முளைக்கும் விஷயம் அனைவரும் அறிந்தது. ஆனால் இந்த முதிய வயதிலும் மூதாட்டி சகிபாலாவுக்கு புதிய பல் முளைத்த விஷயம் ஆச்சரியமூட்டுகிறது. அதை பற்றி மருத்துவரிடம் கேட்டோம். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் எந்த மலர்களால் சிவபெருமானை வழிபட்டால், ஜென்ம பாவம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்?

மருத்துவர் விளக்கம் 

பல் மருத்துவர் ஷியாமல் சென்,"வயதானவர்களுக்கு புதிய பற்கள், முடி வளர்ச்சி அரிதான விஷயம். ஆனால் சாத்தியமற்றது என கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பு கட்டல் எனும் பகுதியில் 100 வயது மூதாட்டிக்கு புதிய பற்கள் முளைத்துள்ளன. பாலூட்டிகள் இனத்திற்கு எந்த நேரத்திலும் புதிய முடி மற்றும் பற்கள் வளர வாய்ப்புள்ளது. ஆனால் பொதுவாக முதிய வயதில் புதிய பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் இதர தாதுப் பொருட்களை உடல் அதிகபட்சமாக கோருகிறது. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது"என்கிறார். 

நீண்ட காலம் வாழும் ரகசியம் 

நீண்ட காலம் வாழ்க்கையை வாழ ஆசையிருந்தால் அதை செயல்படுத்துவது எளிது. சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியம். உங்களுடைய உணவு முறை சரியாக இருந்தால் எளிதில் நீண்ட ஆயுளைப் பெறலாம். இன்று ஒருவருக்கு சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 ஆண்டுகள் வரை குறைந்துள்ளது. நீங்கள் நீண்ட காலம் வாழ என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என தெரிந்து கொள்வோம். 

 உணவு பழக்கம் 

நாம் நீண்ட காலம் வாழ உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ஊட்டச்சத்தை வழங்கும் உணவை சாப்பிடவேண்டும். முழு உடலுக்கும் புரதம் தேவைப்படுகிறது. அந்த உணவுகளை எடுத்து கொள்ளும்போது தசைகள் அதிக பலன்களைப் பெறுகின்றன. உடலின் எலும்பு வலிமை பெற கால்சியம் சத்து அவசியம். நீங்கள் பச்சை காய்கறிகள், முழு தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும்போது, ​​​அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழு உடலுக்கும் நன்மை பயக்கும். நீண்டகாலம் வாழ முடியும். 

இதையும் படிங்க: இரவு முழுக்க பாலில் ஊறிய முந்திரியை சாப்பிட்டு வந்தால்..கிடைக்கும் அற்புத பலன்கள் தெரியுமா?