MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவு முழுக்க பாலில் ஊறிய முந்திரியை சாப்பிட்டு வந்தால்..கிடைக்கும் அற்புத பலன்கள் தெரியுமா?

இரவு முழுக்க பாலில் ஊறிய முந்திரியை சாப்பிட்டு வந்தால்..கிடைக்கும் அற்புத பலன்கள் தெரியுமா?

நிபுணர்கள், பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.  

2 Min read
Author : maria pani
Published : Feb 13 2023, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

முந்திரி பருப்பு சுவையானது. அதை வெறுமனே சாப்பிட்டாலும் சத்துக்கள் கிடைக்கும். அதன் காரணமாக அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது.  

முந்திரி பருப்பை பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். சிலர் தேனில் ஊறவைத்து உண்பர். வெறுமனே உண்பவர்களும் இருக்கின்றனர். சிலர் முந்திரியை பச்சையாக சாப்பிடுவார்கள். வேறு சிலர் இரவில் ஊறவைத்து காலையில் உண்பார்கள். இதையெல்லாம் விட பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

 

27

எவ்வளவு சத்து? 

சுமார் 100 கிராம் முந்திரி பருப்பை சாப்பிட்டால் கிட்டத்தட்ட 18.22 கிராம் புரதச்சத்து கிடைக்கும். இது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதை உண்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எளிமையாகும். முந்திரியை உண்ணும்போது இதய ஆரோக்கியம் மேம்படும். 

37

இந்த பருப்பை சாப்பிடுவதால் நல்ல கொழுப்பு சத்து உங்களுக்கு கிடைக்கும். இதில் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்த ஒலிக் அமிலத்தின் அளவும் அதிகமாக காணப்படுகிறது. இதய நோய்களை எதிர்த்துப் போராட வலிமை கிடைக்கும். முந்திரி பருப்பில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை கூட குறைக்கும். 

47

எலும்பு ஆரோக்கியம் 

பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக மாறும். இதனை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் உண்டால், நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகியவை காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  

57

மலச்சிக்கல்

முந்திரி பருப்பில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் காரணமாக உள்ளது. நாள்தோறும் காலையில் பாலில் ஊற வைத்த முந்திரி பருப்பை சாப்பிடுங்கள்.  

67

நோய் எதிர்ப்பு சக்தி 

வைட்டமின்கள், தாமிரம், இரும்பு, துத்தநாகம் நிறைந்த முந்திரி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முந்திரியை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரண்டு மடங்காகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும். முந்திரி பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை உடலுக்குள் கிருமிகள் நுழைவதை தடுக்கும். 

 

77

பாலில் எப்படி ஊற வைக்க வேண்டும்? 

இரவில் ஒரு டம்ளர் பாலில் மூன்று அல்லது நான்கு முந்திரி பருப்பை போட்டு ஊறவையுங்கள். மறுநாள் இந்த பாலை அருந்தி, முந்திரியை சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்பதை விட எப்படி அதை சாப்பிட்டால் பலன் இரட்டிப்பாகும் என்பதை கருத்தில் கொண்டு உண்ண வேண்டும். 

இதையும் படிங்க: தூக்கி எறியும் பப்பாளி விதைகளுக்குள் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்கோ!

இதையும் படிங்க: வெறும் 2 நிமிடம் தான்.. தீராத மலச்சிக்கலும் நீங்கும்.. இரவில் இந்த ஒரு பழம் சாப்பிட்டு படுத்தால் போதும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Houseflies: கோடைக்காலத்தில் ஈ தொல்லையா? இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
வெற்றியைத் தேடித் தரும் 7 குதிரை ஓவியம்: வாஸ்து படி எந்த திசையில் வைத்தால் யோகம் கிடைக்கும்?
Recommended image3
பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த 6 எளிய மற்றும் சிறந்த வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved