7 tips for happy moments

ரசனை மிக்கவராக மாறுங்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள். 

நண்பர்களை சம்பாதியுங்கள். மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்.

எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும்.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அதனால் மனம் விட்டு சிரியுங்கள். 

கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அந்த கோபம் அவர்களை தாக்கும் முன் நம்மை தாக்கும் என்பதே உண்மை. எனவே தவறு செய்பவர்களை மன்னித்து பழகுங்கள்.

உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள். லவ் பண்ணுங்க பாஸ் லைஃப் நல்லா இருக்கும். 

எதிலும் முடியும் வரை போராடு. அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.