திருமண வாழ்கையில் என்றும் வரக்கூடாத ஒன்று எதுவென்றால் அது சந்தேகம் தான். ஒரு முறை சந்தேகம் வந்துவிட்டாலே போதும், அதைவிட ஒரு கொடிய நோய் வேறு எதுவும்   கிடையாது.

சந்தேகம்வருவதற்கு மிக முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது ஒன்று அழகு

மற்றொன்று தம்மை விட அதிகமாக சம்பாதிப்பத்து தான்.

அதவாது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணிகளால் தான்  சந்தேகம் அடைகின்றனர்.

இதுபோன்ற சந்தேகத்தினால் நாம் செய்யும் 5 முக்கிய தவறுகள் என்னவென்று தெரியுமா ?

பாதுகாப்பின்மை :

தங்கள் துணையை முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது. அதாவது யாருடன் மொபைலில்  பேசுகிறார்கள் என செக் செய்து பார்ப்பது, வங்கி கணக்கை அடிக்கடி சோதிப்பது.இதன் காரணமாக  உங்கள்  மீது உங்கள் துணைக்கு வெறுப்பு தான் அதிகரிக்கும்

நடக்காத ஒன்றை நடந்ததாக நினைத்து  மனதிற்குள் போட்டு புலம்புதல்.இதனால் எங்கு தவறு நடந்ததோ என்ன நடந்ததோ என  நினைத்து நினைத்து எரிச்சல் அடைவது. நிம்மதி இழப்பது  

தொடர்ந்து  தவறு செய்தல், அதாவது வீணாக சந்தேகப்படுவது தவறு என்பதை புரியாமலேயே , அவர்களும் மன நிம்மதி இழந்து, வீட்டில் உள்ள அனைவரின்  இன்பத்தையும்  சின்னபின்னமாக்குவது.மேலும் ஒவ்வொரு நாளும் அழுத்தம் ஏற்பட கடைசியில் பிரிவில் கூட முடியும்.

ஒரு நாள் மட்டும் திருந்தும் சந்தேகக்காரர்கள்

ஒரு சில சந்தேக வாசிகள், திடீரென திருந்தியது போல,சாரி இனி நான் இப்படி செய்ய மாட்டேன் என  அன்பாக சொல்வார்கள்.அந்த வார்த்தை நமக்கு கனவாக  தோன்றும். கடைசியில் அது கனவாகத்தான்  முடியும்.ஏனென்றால் சந்தேக புத்தி உள்ளவர்களால் திருந்தவே  முடியாது.

ஒரு நாள் வெடிக்கும் எரிமலை

சந்தேக புத்தி உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமான நெகடிவ் எண்ணங்களை உள்வைத்து, காத்திருப்பார்கள். எப்பொழுது சமயம் கிடைக்கிறது என பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

வாய்ப்பு கிடைத்தது என்றால் அவ்வளவு தான்  வாழ்க்கை  துணையின் மனதை காயப்படுதுவதில் மும்முரமாக இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் அடித்து உதைக்கும் பழக்கமும் வரும். கடைசியில் நிம்மதியை  இழந்து  வாழ்கையை  தொலைத்து, உங்களால் இருவர் குடும்பத்தின் புகழும் சீரழிந்து விடும்.

கடைசியில் டைவர்ஸ் தான்...... இத்தனைக்கும் காரணமாக திகழும் இந்த  சந்தேகம்  நமக்கு  தேவை தானா...