சமையல் செய்வதை விட அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களை சுத்தம் செய்வத தான் பலருக்கும் கஷ்டமான விஷயம். அதுவும் தீஞ்சு, அடிப்பிடித்த பாத்திரங்களை ஓரளவிற்கு சுத்தம் செய்வதற்குள்ளாக கை வலியே வந்து விடும். ஆனால் இப்படி கஷ்டமே படாமல் ஈஸியாக சுத்தம் செய்ய வழி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

சமைக்கும் போது உணவு அடிப்பிடத்த வாணலியை சுத்தம் கடுமையாக போராட வேண்டி இருக்கும். இது வழக்கமாக அனைவரும் வீட்டில் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை தான். முதலில் அதை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கை வலிக்க ஸ்கிரப்பர் போட்டு தேய்ப்போம். அப்படியும் போகவில்லை என்றால் சிறிது நேரம் சூடான நீரை ஊற்றி ஊற வைப்போம். இவைகள் தான் நமக்கு முதலில் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள். தீஞ்சு போன வாணலிகளை கஷ்டமே இல்லகாமல், அதுவும் பளபள என மின்னும் அளவிற்கு ஈஸியா துலக்க முடியும் என்றால் நம்ப முடியவில்லையா? உண்மை தான். இந்த 5 வழிகளை முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே உண்மை தெரிந்து விடும்.

தீஞ்சு போன வாணலிகளை ஈஸியா சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்:

1. பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர் சிறந்த சுத்தம் செய்யும் பொருட்கள். எரிந்த வாணலியை சுத்தப்படுத்த, ஒரு கப் வெள்ளை வினிகரை ஊற்றி, அதை கொதிக்க விடவும். அதன்பின், வாணலியை தீயில் இருந்து எடுத்து, அதில் பேக்கிங் சோடாவை தூவவும். 10 நிமிடங்கள் அதை குளிர விடுங்கள்.பிறகு கஷ்டமே இல்லாமல் நீங்கள் எளிதாக மீதி கசிவுகளை நீக்க முடியும்.

2. சோப்புடன் கொதிக்க விடுங்கள் : 

சிறிய சோப்பு துகள்களுடன் தண்ணீர் சேர்த்து, தீஞ்ச வாணலியை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். இது வாணலிகளை சுத்தப்படுத்த அதிரடி வேலை செய்யும். இந்த முறையில், வாணலியை நீரால் நிரப்பி, சில துளிகள் சோப்பு சேர்க்கவும். 5-10 நிமிடங்கள் அதை கொதிக்க விடவும், பிறகு அதை குளிரச் செய்யவும். எரிந்த பகுதிகள் ஈஸியாக தனியாக வந்து விடும். பிறகு பாத்திரத்தை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

3. எலுமிச்சை சாறு : 

எலுமிச்சை சமையலறையில் பல பொருட்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, அவற்றின் சக்தியை எரிந்த வாணலிகளை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம். இது எளிமையானது. ஒரு எலுமிச்சை துண்டினை வெட்டி, அதை வாணலியில் நீருடன் சேர்க்கவும். சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அதை ஒரு சில நிமிடங்கள் குளிர விடவும். பிறகு நீர் கழுவும் போது சுத்தம் ஆகும். அதோடு உங்கள் சமையலறையில் புதிய மணத்தை பரப்பும்.

4. ஹைட்ரஜன் பராக்சைடு : 

ஹைட்ரஜன் பராக்சைடு பயன்படுத்தி தீஞ்ச வாணலிகளை சுத்தப்படுத்தலாம். எரிந்த பகுதிகளை மூடிய அளவுக்கு ஹைட்ரஜன் பராக்சைடு ஊற்றவும். அதை குறைந்த தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, தீயை அணைத்து, அதை குளிர விடவும். எளிதாக கழுவி விடவும். இது அற்புதமாக வேலை செய்யும். இருப்பினும், ஹைட்ரஜன் பராக்சைடு பயன்படுத்தும் போது கைகளை பாதுகாக்க gloves அணியவும். அது தோலுக்கு கடுமையான தொற்று அல்லது காயங்களை ஏற்படுத்தலாம்.

5. உப்பு மற்றும் சூடான நீர்:

எரிந்த பகுதியின் மீது உப்பினை பரப்பி, அதில் சூடான நீரை ஊற்றவும். அதை இரவு முழுவதும் ஊற விடவும். உப்பு, மாசுகளை அகற்றி விடும். இதனால் கறைகள் எளிதாக நீங்கி விடும். இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அடிப்பிடித்த வாணலியை மீண்டும் பிரகாசமாக மாற்றும். இதை நீங்கள் முயற்சித்து பாருங்கள். அற்புதமான முடிவுகள் நிச்சயம் உங்கள் ஆச்சரியப்படுத்தும்.