15 நாள் சம்பளத்துடன்...அவசரமாக ஊருக்கு கிளம்பிய 3000 பேர்..! சென்னை தி.நகரின் பின்னணி..! 

வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து வணிக வளாகங்களும் மூட உத்தரவு பிறப்பித்து உள்ளதால் சென்னை தி நகரில் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மிக முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

திநகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் 300-க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. இந்த தெருவில் 500க்கும் அதிகமான பெரிய பெரிய கடைகளும் இருக்கின்றன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் வரும் 31ம் தேதி வரை கடைகள் மூடப்படும் என உத்தரவு வந்ததை அடுத்து தற்போது அனைத்து  கடைகளும் மூடப்பட்டு உள்ளது

இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாகவே அந்த தெருப்பக்கம் மக்கள் நடமாட்டம் இல்லவே இல்லை. இந்த ஒரு நிலையில் இது குறித்து விவரம் அறியாதவர்கள், திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட சென்னை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் தி.நகருக்கு வந்து உள்ளனர். ஆனால் கடைகள் மூடப்பட்டதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர்.

மற்றொரு பக்கம்... இந்த தெருவில் உள்ள கடைகளில் மட்டும் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேர் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அருகில் இருக்கும் சில கட்டிடங்களில் தங்கி இலவசமாக தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் அந்தந்த நிறுவனமே கொடுத்து வந்தது. 

அதில் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள். பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் வேலை செய்த 15 நாட்களுக்கு மட்டும் ஊதியத்தை கொடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது குறித்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க இணைச் செயலாளரான சர்புதீன் இது தெரிவிக்கும்போது, ரங்கநாதன் தெருவில் நடமாடும் மக்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே கடைகளுக்கு வருவார்கள். மற்ற 80 % பேர் ரயில்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்லக் கூடியவர்கள் என தெரிவித்து உள்ளார்.

மேலும் தொடர்ந்து 15 நாட்கள் கடையை மூடி வைத்தால் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கும் என்றும் அதனால் 100 முதல் 300 அடி கொண்டகடைகளை மட்டுமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியாக செல்லக்கூடிய  மக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் வைத்து சோதனை நடத்திக்கொள்ள தயார் என தெரிவித்து உள்ளார்