Horoscope Today: சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் நற்பலன்களை  பெறுவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சனிபகவானின் ராசி மாற்றத்தால், சில ராசிகளில் சனி நல்ல பலன் தரும். மறுபுறம், சனியின் அருள் சில ராசி அறிகுறிகளுக்கு தீங்கு பயக்கும். இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனி தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. 

30 ஆண்டுகளுக்கு பிறகு ராசி மாறும் சனி பகவான்:

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். சனி தேவன் 29 ஏப்ரல் 2022 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் போது சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார்.

 குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் நற்பலன்களை பெறுவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: 

இந்த சனி பெயர்ச்சியின் காரணமாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் துவங்கும் யோகம் கிடைக்கும். அவர்கள், கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான பிரச்சனைகள் வந்து போகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்: 

சனியின் ராசி மாற்றத்தினால் கடக ராசிக்காரர்கள் சவாலான நாளாக இருக்கும். கடகம், ராசிக்கார்களின் ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். இது தவிர, சனி பெயர்ச்சி காலத்தில் செலவுகளும் அதிகரிக்கும். ஆனால், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் ஏற்படும். 

மீனம்:

சனியின் ராசி மாற்றத்தால் மீனத்தில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். சனியின் இந்த சஞ்சாரம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடன் பிரச்சனைகள் வந்து போகும். நீங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். சில சமயம், மன உளைச்சல் வந்து போகும். மேலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு அதிகரிக்கும். 

மேலும் படிக்க....Horoscope Today: செவ்வாயின் ராசி மாற்றம்...யாருக்கு நன்மை...? யாருக்கு ஆபத்து..? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!