கொரோனா :அம்மா.. அம்மா..என அழுத 3 வயது குழந்தை.. மருத்துவமனை வாசலில் நின்று கதறிய செவிலியர் தாய்! 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் என அனைவரும் தன்னலமற்று சேவையாற்றி வருகின்றனர் .இந்த ஒரு நிலையில் 15 நாட்களாக தன் குழந்தையை பிரிந்து மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்த்து வந்த செவிலியர் அம்மா படும் வேதனையை பார்க்கும்போது, அனைவரையும் கண்ணீர் வரவைக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சுனந்தா இவருக்கு வயது 31. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் இருக்கிறாள். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிவருகிறார்.

இதனை தொடர்ந்து தன்னை தானே தனிமை படுத்தி கொண்டு வீட்டிற்கு செல்லாமல் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார். ஆனால் குழந்தை ஐஸ்வர்யா தினமும் தன் தாயை பார்க்க வேண்டும் என அழுது உள்.ளது எனவே ஒரு கட்டத்தில் அவருடைய தந்தை குழந்தையை அழைத்து வந்து, மனைவி  வேலை செய்யும் மருத்துவமனைக்கு வெளியில் நின்று அழைத்துள்ளார்.

குழந்தையை பார்க்க ஓடோடி வந்து, மருத்துவமனை வாசலில் தூரத்தில் இருந்தபடியே குழந்தையை பார்க்கிறார் செவிலியர் தாய். அம்மா அம்மா.. வா என அழுதுக்கொண்டே அழைக்கிறது. இதைப் பார்த்து குழந்தையை அருகில் சென்று தூக்கக் கூட முடியவில்லையே என ஏங்கி அழுகிறார் சுனந்தா. இந்த ஒரு காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள இந்த ஒரு பாசப் போராட்டத்தை பார்க்கும் போது, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்போது தான் கிடைக்குமோ என அனைவரும் கண்கலங்கினர்.