அடுத்த அதிர்ச்சி..! 21 வயது தமிழக மாணவருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்து உள்ளது.

அதாவது கடந்த 17ஆம் தேதி சென்னை வந்த மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்த வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த மாணவரை அனுமதிக்கப்பட்டது.

மாணவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்த போது, அவருக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.