12 ராசியினரும் கவனிக்க படவேண்டிய விஷயம்..! 

மேஷ ராசி நேயர்களே...! 

கடின உழைப்பால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். மனதில் நிலவிய போராட்டங்கள் சற்று குறைய தொடங்கும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும்.

ரிசப ராசி நேயர்களே..!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். எதிர்பார்ப்புகள் உங்களை விட்டு மெல்ல மெல்ல அகலும். ஆரோக்கியம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க அறிகுறிகள் தென்படும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

திடீரென வெளியூர் பயணம் மேற்கொள்ள  வேணி வரலாம். கடன் வாங்கக் கூடிய சூழல் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் செய்யக் கூடிய ஒரு சில செயலைப் பார்த்து எரிச்சல் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே...!
வீடு வாகனம் வாங்க கூடிய நேரம் வரும். பழைய நகைகளை விற்று புதிய நகை வாங்க முற்படுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

சிம்மராசி நேயர்களே...!
ஆடம்பர செலவுகளை குறைப்பது மிகவும் நல்லது. பணம் சேர்ப்பது குறித்து இப்போதே ஒரு நல்ல முடிவை எடுத்து அதற்கான திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெரிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வந்து சேரும்.

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் வரலாம். கனிவான பேச்சால் கடினமான காரியங்களையும் செய்து காட்டுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சக ராசி நேயர்களே...!

புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தொகை கைக்கு வரும். வரும் காலத்தை நினைத்து பணத்தை சேமித்து வைக்க திட்டமிடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கி அமைதி நிலை ஏற்படும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் கேட்பார்கள். எதையும் எதார்த்தமாக பேசி மற்றவர்களை புரிந்துகொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

வேலைச்சுமையால் சோர்வு ஏற்பட கூடிய நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருங்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். தவிர்க்க முடியாத செலவு ஏற்படும். அலைச்சல் உண்டாகும். சில பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

மீனராசி நேயர்களே...!

பணவரவு பல வகைகளில் உங்களுக்கு வரும். வருங்கால திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். கௌரவப் பொறுப்புகள் தேடிவரும். உறவினர் நண்பர்கள் மத்தியில் உங்களது மதிப்பு உயரும்