12 ராசியினரில் யாருக்கு "எதிர்பார்த்த பணம்" கிடைக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களது அந்தஸ்து நாளுக்கு நாள் உயரும்.  அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். திடீரென வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடலாம். புதியவரின் நட்பால் உற்சாக மாக காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.
வாகன செலவு வைக்க வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே..!

விமர்சனங்களை கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வதாக சொன்னவர்கள்  உங்களை விட்டு விலகிச் செல்லலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே...!

நீண்டகால கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடம் நன்றாக பேசி காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள்.மற்றவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பெருமை ஏற்படும். செலவுகளை குறைத்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1024 உயர்வு ..! அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..!

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்து பழகுவீர்கள். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வீடு வாகனத்தை சீர் செய்ய முற்படுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனை குடும்பத்துடன் சேர்ந்து சென்று நிறைவேற்ற முற்படுவீர்கள். பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சிலரின் தவறான செயல்களை எண்ணி வருத்தம் அடைவீர்கள். உடல்நலம் சீராக வைத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடு தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

கேட்ட இடத்திலிருந்து உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். வீடு மனை வாங்குவது குறித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

உறவினர் மற்றும் நண்பர்கள்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். 

கும்ப ராசி நேயர்களே..! 

நினைத்த காரியங்கள் நிறைவேறும்.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

உங்களுடைய கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனமாக இருப்பது நல்லது குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி நிலவும்.