ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1024 உயர்வு ..! அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு  நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.128 உயர்ந்து 4153 ரூபாய்க்கும், சவரனுக்கு 1024  ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி வேலூருக்கு மழை..! 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை லேசான மழைக்கு கேரன்டி!...

பெரும் சாதனை படைத்த லைகா மொபைல் நிறுவனம்..! தட்டி தூக்கிய 3,100 கோடி! சாத்தியமானது எப்படி..?

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.60 பைசா அதிகரித்து 50.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில்  காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மற்ற துறைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தின் மீதான முதலீட்டுக்கே முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

அதே போன்று, இந்திய வர்த்தகமும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் விலை 35 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.