பெரும் சாதனை படைத்த லைகா மொபைல் நிறுவனம்..! தட்டி தூக்கிய 3,100 கோடி! சாத்தியமானது எப்படி..? 

கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லைகா மொபைல் நிறுவனம் தற்போது 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னுடைய கிளையை உருவாக்கியுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லைகா மொபைல் நிறுவனம் மற்ற நாடுகளில் உள்ள மிக முக்கியமான தொலைபேசி நிறுவனத்தின் சிக்னலை பெற்று அதன் மூலமாகவே இன்டர்நெட் சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அது மட்டும் அல்லாமல் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு சேவையையும் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்குவதற்கு மொபைல் வேர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர்(mvno) என்று அழைக்கப்படுகிறது

இந்த ஒரு தருணத்தில் லைக்கா மொபைல் நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டில் இயங்கிவந்த கிளையை அந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்று 372 மில்லியன் யூரோக்களை கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லவேண்டுமென்றால் 3,100 கோடி ரூபாய். வரலாற்றிலேயே ஒரு mvno கம்பெனி இந்த அளவிற்கு விலை போனது இதுவே முதல் முறை. இந்த ஒரு கிளை நிறுவனம் விற்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 23 நாடுகளில் உள்ள மற்ற கிளை நிறுவனங்களும் மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

24 கிளை நிறுவனங்களில் ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் விற்று இந்த அளவுக்கு மாபெரும் மூலதனத்தை பார்த்து உள்ளது லைகா மொபைல் நிறுவனம். அதேவேளையில் சமீபத்தில் உகாண்டா நாட்டில் தன்னுடைய சொந்த நெட்வொர்க் ஒன்றை லைக்கா மொபைல் நிறுவனம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனைத்தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் இயங்கிவந்த லைக்கா மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது லைக்கா மொபைல் நிறுவனம். லைகா மொபைல் நிறுவனத்தின் இந்த சாதனையை உலக நாடுகள் உற்று நோக்குகிறது.