வி.ஐ.பிக்கள் தேடி வந்து உதவும் யோகம் கொண்ட ராசியினர் யார் தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே..!

புத்துணர்ச்சியுடன் காணப்படும் நாள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பல்வேறு காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

சிலரின் கேலி பேச்சுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தினருடன் இருந்து வந்த சலசலப்பு மறையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் கொடுத்து விடாதீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

பழைய சம்பவங்களை அடிக்கடி நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். ஒரு தெளிவான முடிவு எடுக்கக் கூடிய நிலை ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பணம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சொத்து வாங்குவதற்காக கடன் வாங்கக் கூடிய நிலை ஏற்படும். ஒரு சிலர் வீடு மாறி செல்வார்கள். உங்களுக்கு பிடித்த கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

ஒரு சில விஷயங்களில் தைரியமாக முடிவை எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

துலாம் ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். விஐபிக்கள் தக்க சமயத்தில் வந்து உதவுவார்கள்.

விருச்சக ராசி நேயர்களே..!

மதிப்பும் மரியாதையும் உயரும். பணப்பற்றாக்குறை மெல்ல மெல்ல விலகும். உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வந்து சந்தித்து பேசுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

என்றோ ஒரு நாள் மற்றவர்களுக்கு செய்த உதவியால் இன்று உங்களை மதிக்கப்படுவார்கள். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு ஏற்படும். சகோதரர் உங்களை தேடி வந்து உதவி செய்வார். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

நீண்ட இழுபறிக்குப் பின் பல வேலைகள் முடியும். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

கும்ப ராசி நேயர்களே...!

வீண் அலைச்சல் ஏற்படகூடிய நாள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். பணம் பற்றாக்குறையால் பிறரிடம் பணம் கேட்க கூடிய நிலை ஏற்படும்.

மீனராசி நேயர்களே...!

உங்களது சிந்தனை திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.