12 ராசியினரில் யாருக்கு பணவரவு அதிக உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

நேற்று முதல் இருந்து வந்த ஒரு பெரிய பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.பிள்ளைகளின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ரிஷப ராசி நேயர்களே...!

தடைபட்ட காரியங்கள் விரைவில் தானாக சரியாகிவிடும். உறவினர் வகையில் சில செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தொகை உங்கள் கைக்கு வந்து சேரும்.

மிதுன ராசி நேயர்களே...!

போன் மூலம் உங்களுக்கு பிடித்த ஒரு செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறிப்பு சிந்திப்பீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை மெல்லமெல்ல நீங்கிவிடும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த பகை சற்று குறைய தொடங்கும்.

கடக ராசி நேயர்களே...!

பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வரவும் செலவும் ஒரே மாதிரி இருக்கும். வாகன மாற்றம் குறித்து யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அயல் நாட்டிலிருந்து ஒரு நல்ல செய்தி வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள். நல்ல பலனைக் கொடுக்கும். பொது வாழ்வில் புதிய திருப்பங்கள் நாளுக்கு நாள் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும். வருமானம் திருப்தியாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார். எதிர்பார்த்த அளவுக்கு பணம் திருப்தியாக இருக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தேக்க நிலை மாறி ஒரு தெளிவான எடுக்கக்கூடிய நாள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

யோசித்து செயல்பட வேண்டிய நிலை வரும். பணிகளில் தொய்வு ஏற்படலாம். கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். விருந்தினர் வருகை இருக்கும் .வாகன பழுது அவ்வப்போது ஏற்படலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வரவு செலவு சரியாக இருக்கும். வாகனம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு.

மகர ராசி நேயர்களே...!

மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். மாற்றுக் கருத்துடையவர்கள் உங்களைவிட்டு விலகுவார்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு உண்டாகும்.

கும்ப ராசி நேயர்களே...!

பம்பரம்போல் சுழன்று பணிபுரிய வேண்டிய நாள். பாராட்டும் கிடைக்கும். புகழும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத்தையும் உங்களை வந்து அடையும்.

மீனராசி நேயர்களே...!

விலகிச்சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். அலைபேசி வழியில் நல்ல செய்தி வந்து சேரும். திருமணத் தடை அகலும்.