12 ராசியினரில் யாருக்கு அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பதவியில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். திடீரென பணவரவு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் உங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் அதிகரிக்கும். 

கடக ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகள்  உங்களுக்கு உதவி செய்வார்கள். பொதுநலத்தில் ஈடுபடுவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் மீண்டும் தொடரும்.

சிம்மராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் நன்மை கொடுக்கும். உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு சில தொகை செலவிட்டு மகிழக்கூடிய நாள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சந்தோஷம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவை எடுக்கக் கூடிய நிலை ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் சந்தோஷம் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.

மகர ராசி நேயர்களே...!

நல்ல நட்பால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். வீடு வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தாமதமாக நடைபெற்று வந்த காரியம் விரைவில் முடியும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் விருத்தி அடையும்.

கும்ப ராசி நேயர்களே..! 

திருமண வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

மீன ராசி நேயர்களே...!

விநாயகரை வழிபட்டால் நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்களிடம் யோசித்துப் பேசுவது நல்லது. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.