பச்சை நிறமே பச்சை நிறமே; எந்த கலர் புடவைக்கு பச்சை ப்ளவுஸ் எடுப்பாக இருக்கும்; ஃபேஷன் டிப்ஸ்!!
பச்சை நிற ரவிக்கைக்கு ஏற்ற புடவைகள் பல உள்ளன, பொருத்தமான புடவைகளின் நிறங்களை உங்களுக்கு டிப்ஸ் ஆக தருகின்றனர் ஃபேஷன் டிசைனர்கள்.
சந்தன நிறம்
பச்சை நிறம் பார்ட்டி, பிசினஸ் மீட் என அனைத்திற்கும் ஏற்ற நிறம். பச்சை நிற ஆடை கம்பீரமான தோற்றத்தை கொடுக்கும். சந்தன நிற புடவைக்கு பச்சை நிற ரவிக்கை அணிந்தால் ராயல் லுக் கிடைக்கும்.
இளம் மஞ்சள்
இளம் மஞ்சள் நிற புடவைக்கு பச்சை நிற ரவிக்கை அணியலாம். உங்களுடைய தோற்றம் பிரகாசமாக இருக்கும். அதற்கேற்ப மஞ்சள் நிறத்தில் காதணிகள், நகைகளை அணியலாம்.
நீல நிறம் பச்சை காம்பினேசன்
நீல நிறம், நேவி புளு புடவைகளுக்கு பச்சை நிற ரவிக்கை அழகான தோற்றத்தை கொடுக்கும்.
200 கிலோ தங்க நகைகளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா ராய்! டிசைன் செய்தவர்கள் யார் தெரியுமா?
நெஞ்சைக் கவரும் இளஞ்சிவப்பு
காதலர்கள் இளஞ்சிவப்பு நிற புடவையை அணிவார்கள். பச்சை நிற ரவிக்கையுடன் இளஞ்சிவப்பு நிற புடவையை அணியலாம்.
பழுப்பு நிறம் க்ரே கலர் புடவை
க்ரே கலர் புடவைக்கும் பழுப்பு நிற புடவைக்கும் பச்சை நிற ஜாக்கெட் அணியலாம். இந்தப் புடவைக்கு மேட்சாக நகை அணிய வேண்டும்.
பாத்ரூம் செப்பல் ஒரு லட்ச ரூபாயாம்! அப்புடி என்ன தான் இருக்கு இந்த செருப்புல? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
கருப்பு நிற புடவைகள்
கருப்பு நிற பச்சை டிசைன் போட்ட சுங்கிடி, காட்டன் புடவைக்கு பச்சை நிற ப்ளவுஸ் அழகான தோற்றத்தை தரும்.