Asianet News TamilAsianet News Tamil

பாத்ரூம் செப்பல் ஒரு லட்ச ரூபாயாம்! அப்புடி என்ன தான் இருக்கு இந்த செருப்புல? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

செருப்புக்கு இம்புட்டு விலையா? என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். வழக்கமாக குளியலறையில் அணியும் சாதாரண செருப்பு போல இருக்கும் இதற்கு இவ்வளவு அதிகமான விலையா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Bathroom Slippers: Internet Reacts To Kuwait Store's Rs 1 Lakh Sandals sgb
Author
First Published Jul 16, 2024, 11:13 PM IST | Last Updated Jul 16, 2024, 11:13 PM IST

சவுதி அரேபியாவின் குவைத்தில் உள்ள ஒரு செருப்பு கடையில் சுமார் 4,500 ரியால்களுக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) ஒரு செருப்பு விற்பனைக்கு உள்ளது. இந்த செருப்பின் விலை இந்தியாவில் பல நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில், "சனோபா என்ற சமீபத்திய ஃபேஷன் செப்பல் 4500 ரியால் விலையில் விற்பனைக்கு உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, பலவிதமான எதிர்வினைகள் குவிந்து வருகின்றன.

செருப்புக்கு இம்புட்டு விலையா? என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். வழக்கமாக குளியலறையில் அணியும் சாதாரண செருப்பு போல இருக்கும் இதற்கு இவ்வளவு அதிகமான விலையா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

வெறித்தனம்... மலேசியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோர் பக்கத்திலேயே தாறுமாறாக சம்பவம் செய்த சாம்சங்!

"இவர்கள் பணக்காரர்களிடம் எதை வேண்டுமானாலும் அதிக விலை வைத்து விற்பனை செய்துவிடலாம் என்று முயற்சி செய்கிறார்கள்" என்று ஒரு பயனர் கூறுகிறாப். மற்றொருவர், "அப்டீன்னா, நாம் இவ்ளோ நாள் டாய்லெட் போகும்போது யூஸ் பண்ணுற செருப்பு 4500 ரியால் மதிப்புள்ளதா?" என்று  வித்தியாசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்தச் செருப்பை இந்தியாவில் 60 ரூபாயில் வாங்கிவிடலாம்" என்று ஒரு பயனர் சொல்லி இருக்கிறார். "இந்தியாவில் சில இடங்களில் இதை வெறும் 30 ரூபாய்க்கே வாங்கலாம்" என்று இன்னொருவர் பதில் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அங்கு ஒரு பயனர், "நாங்கள் இதை ஹவாய் ஸ்லிப்பர் என்று அழைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இன்னொரு இன்ஸ்டா பயனர் வீடியோவைப் பார்த்து செம கடுப்பாகிவிட்டார். "வாவ்! மோசடியின் உச்சம் இதுதான்" என்று அவர் கூறியிருக்கிறார்.

நிலவில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்காம்! விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய லொகேஷன் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios