Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் இல்லைன்னு அடித்துச்சொன்ன நிலையில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு … பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை ?

Zika virus in india ... central govt accepted and sent report to WHO
Zika virus in india ... central govt accepted and sent report to WHO
Author
First Published May 28, 2017, 6:48 AM IST


உலகின் பல பகுதிகளில் ஜிகா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது  அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததாக  உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் முதன்முதலில் குரங்குகளை தாக்கியபோதுதான் இப்படி ஒரு  கிருமி இருப்பது குறித்து  தெரிய வந்தது. இதனையடுத்த  1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது.

Zika virus in india ... central govt accepted and sent report to WHO

கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜிகா காடுகளில் முதன்முதலில் இந்த கிருமி உருவானதால் அதற்து ஜிகா  வைரஸ் என பெயரிடப்பட்டது.

Zika virus in india ... central govt accepted and sent report to WHO

 கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது. இதனால் ஆயிரக்கணக்கொனோர் உயிரிழந்தனர்.


அதே நேரத்தில் உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios