இனிமெட்ரோ ரயிலில் Loud Speaker-ல் பாட்டு கேட்க முடியாது.. மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..
பெங்களூரு மெட்ரோ ரயிலில், லவுட் ஸ்பீக்கரில் பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இடையூறுகளை தவிர்க்கும் வகையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில்களில் ஸ்பீக்கரில் இசை இசைக்க தடை விதித்துள்ளது. இருப்பினும், பயணிகள் இசையை கேட்கும் போது இயர்போன்களைப் பயன்படுத்த அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியிடப்பட்ட நிலையில், இனி மெட்ரோ ரயிலுக்குள் பயணிக்கும் போது ஒலிபெருக்கியில் இசை இசைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் இதுகுறித்து பேசிய போது“மற்ற சக பயணிகளின் உணர்வுகளை மனதில் வைத்து ரயில்களுக்குள் இசையை இசைக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த முடிவு கீழ் மட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!
இருப்பினும், விதியை மீறினால் ஏதேனும் தண்டனை கிடைக்குமா என்பதை அவ்ர் குறிப்பிடவில்லை. ரயிலில் பயணம் செய்யும்போது விதிக்கப்படும் பல கட்டுப்பாடுகளில் இசையை இசைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
சமீபகாலமாக, பெங்களூரு நம்ம மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வை ரயிலில் உள்ள காட்சி அமைப்பில் இயக்கப்படும் குறும்படங்கள் மூலம் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது., சாப்பிடுவதில் கட்டுப்பாடுகள், ரயிலில் ஏறும் போது லைன் சிஸ்டத்தை கடைபிடித்தல், போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும்.
குடிமக்களுக்காக குடிமக்கள் அமைப்பின் நிறுவனர் மற்றும் கன்வீனரான ராஜ்குமார் துகர், பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்தின் முடிவைப் பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர் “இது நிச்சயமாக வரவேற்கத்தக்க நடவடிக்கை. மென்மையான இசையை கேட்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் பலர் சத்தமாக இசையை கேட்பது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். இது சக பயணிகளுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
கர்நாடகாவில் மாணவர்களின் புத்தகப் பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? கல்வித்துறை அதிரடி உத்தரவு!!