டி.வி தொடர்களில் ‘பிக் பாஸ்10’ என அழைக்கப்படும் நிகழ்ச்சியில் வந்து புகழ்பெற்றவரும், தன்னைத் தானே கடவுள் என அழைத்துக் கொள்ளும் ஓம் சாமி, மேலாடையின்றி அரைநிர்வாணத்துடன் மாடல் பெண் ஒருவருக்கு யோகாகற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தியில் ஒளிபரப்பாகும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி சேனலில்  ‘பிக் பாஸ்10’  எனும் நிகழ்ச்சி புகழ்பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் ஒம் சாமி.

சல்மான்கானுடன் நிகழ்ச்சியில் கடுமையாக மோதி, சர்ச்சைக்குரிய கருத்துக்களைஒம் சாமி தெரிவித்து பிரபலமானவர். சல்மான்கானுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும், திருமணமாகி லண்டனில் குழந்தை இருப்பதாகவும் பேசி ஓம் சாமி பரபரப்பை ஏற்படுத்தினார். சல்மான்கானை அடித்து உதைத்து எலும்பை உடைத்துவிடுவேன் என நிகழ்ச்சியில் கூறி ஓம் சாமி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஓம் சாமி, ஒரு மாடல் பெண் ஒருவருக்கு யோகாகற்றுத்தரும் வீடியோ யூடியூப்பில்  வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மாடல்பெண் அரை நிர்வாணத்துடன், மேலாடையின்றி, அமர்ந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு யோகா கலையை ஓம் சாமி கற்றுத்தருகிறார். இந்த வீடியோ இப்போதுவைரலாகி உள்ளது.