வெளுத்து வாங்கும் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!
Heavy Rain : தமிழகத்தைப் போல பிற நகரங்களிலும் தற்பொழுது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு கட்டிடங்கள் இடிந்து விடும் சம்பவம் நடந்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பொதுவாக அக்டோபர் மாத கடைசி வாரத்தில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த முறை சுமார் 15 நாட்களுக்கு முன்னதாகவே, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் நல்ல முறையில் பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், அவ்வப்போது செய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது இயல்பான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அனேக இடங்களில் மழை பெய்து வருவது போல, பெங்களூரு சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில நாள்களாகவே பெங்களூரிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு. சிலவகை மீன்களும் அதில் தென்படுவதால், ஆர்வத்துடன் அதை பிடித்து மக்கள் விற்பனை செய்து வரும் காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இடைநிலை பள்ளிக்கல்வி; 30 சதவிகித கிராம மக்களுக்கு தான் கிடைச்சிருக்கு - எந்த மாநிலத்தில் தெரியுமா?
ஏற்கனவே நேற்று அக்டோபர் 21ம் தேதி பெங்களூருவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அம்மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள "Yellow Alert" காரணமாக நாளை அக்டோபர் 23ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த "Yellow Alert" ஆனது இன்று மதியம் 1:30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சூழலில் அதிக அளவில் மக்கள் வெளியில் பயணிப்பதை தவிர்க்கும் வண்ணம் மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு கர்நாடகா அரசு வலியுறுத்தி உள்ளது. அது மட்டும் அல்லாமல் நாளை பெங்களூரு முழுவதும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக கர்நாடக அரசு தெரிவித்து இருக்கிறது.
கல்லூரிகளுக்கு விடுப்பு உண்டா இல்லையா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய இடத்தில் இருந்த அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று முற்றிலுமாக சரிந்து விழுந்து ஒருவர் இறந்திருப்பதாக தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிழக்கு பெங்களூருவில் உள்ள பாபுசபால்யா என்ற பகுதியில் தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே ஒருவர் இறந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் வந்து, இடிபாடுகளை அகற்றி, கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அங்கிருந்து 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டானா புயல் எதிரொலி; சென்னை, திருச்சி உள்ளிட்ட பல வழித்தடங்களில் 28 ரயில்கள் ரத்து - லிஸ்ட் இதோ!