MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டானா புயல் எதிரொலி; சென்னை, திருச்சி உள்ளிட்ட பல வழித்தடங்களில் 28 ரயில்கள் ரத்து - லிஸ்ட் இதோ!

டானா புயல் எதிரொலி; சென்னை, திருச்சி உள்ளிட்ட பல வழித்தடங்களில் 28 ரயில்கள் ரத்து - லிஸ்ட் இதோ!

Trains Cancelled in Tamil Nadu : டானா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரயில்களை ரத்து செய்வதாக தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருக்கிறது.

2 Min read
Ansgar R
Published : Oct 22 2024, 07:40 PM IST| Updated : Oct 22 2024, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Southern Railways

Southern Railways

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்களும் பல முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், தென்னக ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சுமார் 28 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறது. வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி, அதாவது நாளை புதன்கிழமை தொடங்கி, அக்டோபர் 26 ஆம் தேதி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில்களின் மொத்த பட்டியல் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! வெளியான சூப்பர் அறிவிப்பு!

24
Train Chart 1

Train Chart 1

அதன்படி வண்டி எண் 22603, காரக்பூரில் இருந்து அக்டோபர் மாதம் 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வண்டி எண் 12841 அக்டோபர் 24ஆம் தேதி மதியம் 3.20 மணிக்கு ஷாலிமரில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வந்து சேர வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வண்டி எண் 12663 அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஹௌராவில் இருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி வந்தடையும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று தென்னை ரயில்வே அறிவித்துள்ளது.

34
Train Chart 2

Train Chart 2

வண்டி எண் 12839 அக்டோபர் 24ஆம் தேதி ஹௌராவிலிருந்து இரவு 11:55க்கு புறப்பட்டு, அடுத்த நாள் சென்னை சென்ட்ரல் வந்தடையும் அதிவேக வண்டியும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 22644 அக்டோபர் 24ஆம் தேதி பாட்னாவில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் சென்றடையும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வண்டி எண் 22808 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு புறப்பட்டு சந்த்ராகாச்சி சென்றடையும் ஏசி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

44
Train Chart 3

Train Chart 3

வண்டி எண் 06095 அக்டோபர் 24ஆம் தேதி மதியம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற, சந்த்ராகாச்சி செல்லக்கூடிய சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. வண்டி எண் 06087, 24 ஆம் தேதி அக்டோபர் இரவு ஒன்று 1.05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து ஷாலிமர் செல்ல வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோல மொத்தம் 28 ரயில்கள், அக்டோபர் 23, 24, மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Chennai Heavy Rain Alert: 10 மாவட்டங்களில் இன்று பட்டையை கிளப்பப்போகும் கனமழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

About the Author

AR
Ansgar R
சென்னை
திருச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
Recommended image2
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
Recommended image3
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved