MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இடைநிலை பள்ளிக்கல்வி; 30 சதவிகித கிராம மக்களுக்கு தான் கிடைச்சிருக்கு - எந்த மாநிலத்தில் தெரியுமா?

இடைநிலை பள்ளிக்கல்வி; 30 சதவிகித கிராம மக்களுக்கு தான் கிடைச்சிருக்கு - எந்த மாநிலத்தில் தெரியுமா?

Secondary Education : இந்த செய்தியில், குறிப்பிட்ட ஒரு மாநிலம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்ட தகவலாகும்.

2 Min read
Ansgar R
Published : Oct 22 2024, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bangalore Schools

Bangalore Schools

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) நடத்திய விரிவான வருடாந்திர "மாடுலர் சர்வே" 2022-23ல், இந்தியாவில் உள்ள பிரபலமான மாநிலம் ஒன்றில், 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, கிராமப்புற மக்களில், சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே இடைநிலை பள்ளிக்கல்வியை முடித்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தேசிய சராசரியை விடக் குறைவாகவும், குறிப்பாக 56 சதவீதத்தை விடக் குறைவாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prayagraj Kumbh Mela 2025: 2025 மகா கும்பமேளா! பிரயாக்ராஜ் மக்களுக்கு சூப்பர் செய்தி!

24
Secondary Education

Secondary Education

சுமார் 3.02 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கிராமங்கள் உட்பட 15,298 முதல்-நிலை யூனிட்டுகளை இந்த கணக்கெடுப்பு உள்ளடக்கியுள்ளது. கல்வி, மருத்துவச் செலவு, மொபைல் மற்றும் இணைய பயன்பாடு, நிதி உள்ளடக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) திறன்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பான விஷயங்களை அடிப்படையாக வைத்தே இந்த தரவுகளை சேகரிப்பதே ஆய்வின் முதன்மை நோக்கமாகும். மேலும், குடிநீர், சுகாதாரம், எரிசக்தி பயன்பாடு, பிறப்பு பதிவு மற்றும் போக்குவரத்து வசதிகள் பற்றிய தகவல்களும் இதில் சேகரிக்கப்பட்டன.

34
Bengaluru

Bengaluru

கர்நாடகா 

ஆம்.. இந்த பரபரப்பு சர்வே நடத்தப்பட்டது கர்நாடகாவில் தான். கர்நாடகத்திற்கான இந்த கணக்கெடுப்பு முடிவுகளில்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் நகர்ப்புற கல்வியில், கர்நாடக மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆனால் கிராமப்புற கல்வியை உற்றுநோக்கும்போது தான் பெரிய சரிவை சந்திக்கிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. பெங்களூரு, இந்திய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட மாநிலமாக உள்ளது. அதே போல 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, அந்த மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகையில் சுமார் 56.6 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த மாநிலம் அதன் இளைய வயதுடைய மக்களிடையே நம்பிக்கைக்குரிய கல்வியறிவு விகிதங்களைக் காட்டுகிறது. ஏறக்குறைய 15-24 வயதுடைய ஆண்களில் 97.8 சதவீதமும், பெண்களில் 95.9 சதவீதமும் புரிந்துணர்வுடன் எளிய அறிக்கைகளைப் படிக்கவும் எழுதவும் முடியும், இது கல்வியறிவு நிலைகள் தேசிய தரத்திற்கு இணையாக இருப்பதைக் குறிக்கிறது. நகர்ப்புற மையங்களில் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான சிறந்த அணுகலுடன் இணைந்து சிறுவயதுக் கல்வியில் கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம்.
 

44
Bengaluru urban Schools

Bengaluru urban Schools

அதே போல 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 94.6 சதவீதம் பேர் வங்கிக் கணக்கு அல்லது மொபைல் மூலம் பணம் வழங்குவதற்கான அணுகலைக் கொண்டுள்ளனர். இருப்பினும், நகர்ப்புறங்களில் 89 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 67.2 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தை அணுகவும் பயன்படுத்தவும் முடிகிறது.

PM Modi Degree Row: கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved