காங்கிரஸில் சேர்வதை விட கிணற்றில் குதித்துவிடலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
60 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியில் சாதித்ததைவிட இரு மடங்கு அதிகமாக பாஜக சாதித்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் சேர்வதைவிட கிணற்றில் குதிக்கலாம் எனவும் நிதின் கட்கரி கூறினார்.
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி சமீபத்தில் ஒரு அரசியல்வாதி அவரை காங்கிரஸில் சேருமாறு அறிவுறுத்திய கதையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, அந்தக் கட்சியில் உறுப்பினர் ஆவதைவிட கிணற்றில் குதித்து இறப்பதே சிறந்தது என்று பதிலளித்ததாகவும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.
பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் பண்டாராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கட்கரி, பாஜகவுக்காக பணியாற்றிய தனது ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்தார். காங்கிரஸ் தனது 60 ஆண்டு கால ஆட்சியில் சாதித்ததை விட, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசு இரண்டு மடங்கு அதிகமாக சாதித்துள்ளது என்றும் கட்கரி தெரிவித்தார்.
வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்
ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) பணியாற்றியது பற்றி பேசிய அவர், தனது இளமைப் பருவத்தில் மதிப்பீடுகளை தனக்குள் விதைத்தது ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
"நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த காலத்திலிருந்து நாம் எதிர்காலத்திற்கான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வறுமையை ஒழிப்போம் என்ற முழங்கி வருகிறது. ஆனால் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவே பல நிறுவனங்களை உருவாக்கியது" என்று அவர் கூறினார்.
நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தை நெகிழச் செய்யும் இஜ்திஹாத்
இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிதின் கட்கரி பாராட்டினார். நாட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது என்ற அவர், "60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸால் செய்ய முடியாத பணிகளைவிட இரண்டு மடங்கு பணிகளை கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது" என்றார்.
மேலும், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்தபோது, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் சாலைகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ளதைப் போல இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கிரீன் கார்டு விதிகளைத் தளர்த்திய அமெரிக்கா! பிரதமர் மோடி பயணத்தை முன்னிட்டு அறிவிப்பு!