டோலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் ஊழியர்.. கடுமையாக தாக்கி கீழே தள்ளிய பெண் - ஏன்? என்ன நடந்தது?
டோல் கட்டணம் செலுத்தசொன்ன அந்த டோல் பிளாசா பெண் ஊழியரின் முடியை பிடித்து இழுத்து, அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

நொய்டாவில் ஒரு பெண், சுங்கச்சாவடி ஊழியரிடம் மிக கொடூரமாக நடந்துகொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட லுஹர்லி சுங்கச்சாவடியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டோல் கட்டணம் செலுத்தசொன்ன அந்த டோல் பிளாசா பெண் ஊழியரின் முடியை பிடித்து இழுத்து, அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கி, இறுதியியல் அவரை கீழே தள்ளியுள்ளார் அந்த பெண். இந்த காட்சிகள் அனைத்தும் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி: டிமாண்ட் வைத்த சிராக் பஸ்வான்!
வெளியான இந்த வீடியோவில் சுங்குச்சாவடிக்கு வெளியே இருந்து ஒரு பெண் ஊழியர்கள் டோல் கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்குள் நுழைகிறார். அங்கு இருக்கும் டோல் பிளாசா ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதன் பிறகு அவர் முடியை பிடித்து இழுத்து, அவர் முகத்தில் அடித்து இறுதியில் அவரை தரையில் தள்ளுகிறார்.
இறுதியாக இரு ஆண்கள் வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து சென்ற நிலையிலும், அவர் அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தொடர்ந்து கோபத்துடன் பேசியது அந்த சுங்கச்சாவடியை கடந்து சென்ற பலரால் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த டோல் பிளாசா அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும், டோல் பிளாசா ஊழியர் அவரிடம் அடையாள அட்டை கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் கடுப்பான அந்த பெண் சுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார், தற்பொழுது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு