Asianet News TamilAsianet News Tamil

சந்திரயான்-3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-3 வி ண்கலம் வெற்றிகரமாக 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chandrayaan-3: Second orbit-raising manoeuvre successfully performed, says Isro
Author
First Published Jul 17, 2023, 4:59 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை இரண்டாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை திங்கள்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இதைப்பற்றி இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த சுற்றுப்பாதைக்கான நகர்வு நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, விண்கலத்தை முதல் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

கணவனை இழந்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... தோழியின் கணவருடன் சேர்ந்து பழி தீர்த்த இளம்பெண்

Chandrayaan-3: Second orbit-raising manoeuvre successfully performed, says Isro

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான் 3 வெண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவப்பகுதியில் விண்கலத்தை மென்மையான தரையிறக்கம் செய்யும் செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டத்தை மேற்கொண்டிருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் விண்கலம் 3வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடிந்தது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு இந்து கோயில்கள் இடிப்பு! ராக்கெட் வீசப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios