கணவனை இழந்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... தோழியின் கணவருடன் சேர்ந்து பழி தீர்த்த இளம்பெண்

கணவரை இழந்த இளம் பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துவந்த நபரை அந்தப் பெண் தன் தோழியின் கணவர் உதவியுடன் கொன்றிருக்கிறார்.

Delhi Woman, Friend Stab Man To Death For Raping Her, Arrested: Cops

வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் 20 வயது இளைஞரைக் கொன்றதாக ஒரு பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட நபர் அந்தப் பெண்ணை பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்குப் பழிவாங்க அவரைக் கொன்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் யமுனை ஆற்று வெள்ளத்தைப் பார்க்கலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றதாகவும்,  பேலா பண்ணைக்கு அருகில் உள்ள இடத்திற்குப் போனதும் ஒரு ஆண் நண்பரின் உதவியுடன் அவரைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்றதாவும் போலீசார் கூறுகின்றனர்.

சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை! ம.பி. பாஜக தலைவரின் மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு!

ஞாயிற்றுக்கிழமை காலை 8:34 மணியளவில், சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள பேலா பண்ணையில் கழுத்து மற்றும் வயிற்றில் காயங்களுடன் சட்டையின்றி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான முறையில் தென்பட்ட இரண்டு பேரை அடையாளம் கண்டனர்.

Delhi Woman, Friend Stab Man To Death For Raping Her, Arrested: Cops

கொலையில் தொடர்புடைய 20 வயது பெண் உத்தர பிரதேசத்தின் படாயுனில் வசிக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த 36 வயதான இர்பான் சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவரது கணவர் ஜனவரி மாதம் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நபர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், கணவர் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை அதிகரித்ததாகவும்  அதற்காக அவரைப் பழிவாங்க நினைத்தாதவும் போலீசாரிடம் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதாகியுள்ள மற்றொரு நபரான இர்பானின் மனைவியின் அந்த பெண்ணுக்கு நெருங்கிய தோழி. தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்ததும் இர்பான் அவரைத் தீர்த்துக்கட்ட உதவுவதாகக் கூறியதாவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

நிரம்பி வழியும் யமுனையைப் பார்க்கலாம் என்றும் கூட்டிச்சென்று அந்த நபரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு உடலை அருகில் இருந்த தோட்டத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர் எனவும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி சம்பவ இடத்திற்கு அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு வழங்கிய சுதா - நாராயணமூர்த்தி தம்பதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios