Mangaluru Leopard: கிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்
மங்களூரில் கிணற்றில் விழுந்த ஒரு வயதே ஆன சிறுத்தையை கால்நடை மருத்துவத் தம்பதியர் வெற்றிகரமாக மீட்டு ஊர்மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
25 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து தவித்த சிறுத்தையை பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் இரண்டு மணிநேரத்தில் காப்பாற்றி இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கடீல் என்பவரது வீட்டில் உள்ள 25 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று விழுந்துவிட்டது.
இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சிறுத்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இரண்டு நாட்களாக பல விதங்களில் முயன்று வனத்துறையினரால் சிறுத்தையை மீட்க முடியவில்லை.
எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஜோடி திருமணம்... உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாகிய பெங்கால் தம்பதி!!
பின்னர் மங்களூருவில் உள்ள தனியார் மீட்புப் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கால்நடை மருத்துவர்கள் டாக்டர் மேக்னா பிரேமையா மற்றும் அவரது கணவர் டாக்டர் யஷாஸ்வி நராவி ஆகியோர் தங்கள் மீட்புக் குழுவினருடன் சிறுத்தையை மீட்க வந்தனர்.
வனத்துறையினர் ஏணியை கிணற்றுக்குள் இறக்கி சிறுத்தையை மீட்க முயன்றனர். ஆனால் சிறுத்தை வெளியே வர விரும்பவில்லை. எனவே கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை மீட்க முடிவு செய்தனர். டாக்டர் மேக்னா பாதுகாப்புக்காக ஒரு கூண்டுக்குள் அமர்ந்த நிலையில் கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். தற்காப்புக்காக அவர் கையில் ஒரு துப்பாக்கியும் வைத்திருந்தார்.
“கிணற்றுக்குள் இறங்கியபோது அதிர்ஷ்டவசமாக சிறுத்தை என் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. அது என்னைப் பார்த்து உறுமிக்கொண்டே இருந்தாலும், ஒரே நொடியில் அதற்கு ஊசி போட்டுவிட்டேன். அடுத்த 15 நிமிடத்தில் அது மயங்கிவிட்டது” என்று கூறுகிறார் டாக்டர் மேக்னா.
ஆனால், மயக்கம் அடைந்த சிறுத்தையைத் தனியாக தூக்கி கூண்டுக்குள் அடைக்க அவரால் முடியவில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை கூண்டில் அடைக்க உதவினார். பின்னர் சிறுத்தை பத்திரமாக கிணற்றில் இருந்து மேலே கொண்டுவரப்பட்டது.
“சிறுத்தையை மீட்க வேண்டும் என்று ஞாயிறு காலை 9.30 மணி அளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சொல்கிறார் டாக்டர் யஷாஸ்வி. உடனே அனைத்து ஏற்பாடுகளுடன் அவர்கள் விரைந்து வந்துள்ளனர். “சிறுத்தையை மீட்பதற்காக முதலில் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அப்போது சிறுத்தை மிகவும் ஆவேசத்துடன் உறுமிக்கொண்டே இருந்தது” என்றும் அவர் கூறுகிறார்.
Senthil Sankar: பாராட்டுகளைவிட பிரதமர் அளித்த அங்கீகாரம்தான் பெருசு! செந்தல் சங்கர் பிரத்யேக பேட்டி