Senthil Sankar: பாராட்டுகளைவிட பிரதமர் அளித்த அங்கீகாரம்தான் பெருசு! செந்தல் சங்கர் பிரத்யேக பேட்டி
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் ஆடைகள் தயாரிக்கும் ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் செந்தில் சங்கர், ஏசியாநெட் வாசகர்களுக்காக அளித்த பிரத்யேக நேர்காணல்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் ஆடைகள் தயாரிக்கும் ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் செந்தில் சங்கர், ஏசியாநெட் வாசகர்களுக்காக அளித்த பிரத்யேக நேர்காணல்.
கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி வெளிர் நீல நிறத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மறுசுழற்சி முறையில் செய்யப்பட்ட 'சத்ரி' ஜாக்கெட் அணிந்திருந்தார். பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களுருவிற்கு இந்திய எரிசக்தி வாரத்தை ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த போது, இந்தியன் ஆயில் நிறுவனம் பிரதமருக்கு அந்த ஜாக்கெட்டை பரிசளித்தது.
அதனை பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு அணிந்து வந்தது பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், அந்த ஜாக்கெட் தயாரிப்பாளரான ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸின் நிர்வாகப் பங்குதாரர் செந்தில் சங்கர், ஏசியாநெட் வாசகர்களுக்காக பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில், பிரத்யேக நேர்காணலில் மறுசுழற்சி முறையில் ஆடை நெய்தல் பற்றி பல்வேறு தகவல்களைகப் பகிர்ந்துகொண்டார்.
கேள்வி 1: மறுசுழற்சி முறையில் ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்த யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?
சங்கர்: நாங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டர் உற்பத்தியை கடந்த 15 ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து பாலிஸ்டர் இழைகளாக உருவாக்குகிறோம். எனவே, அந்த நார் நூலாகவும், பின்னர் துணி மற்றும் ஆடைகளாகவும் மாற்றப்படுகிறது. எங்கள் பிராண்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி, மறுசுழற்சி ஆடையைப ஃபேஷனாக்க முடியும் என்றும் உணர்ந்தோம். மறுசுழற்சி பொருட்களுக்கான சந்தையைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரு பிராண்டைத் தொடங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் ஒரு ஃபேஷனை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம் என்று தோன்றியது. இது குறித்து பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவுக்குப் பிறகு இப்போது அது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் இதுபோல நிறைய சிறுகுறு தொழில்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
கேள்வி 2: இந்த ஜாக்கெட்டை எப்படி தயாரித்தீர்கள்? செயல்முறையை விரிவாகக் கூறுங்கள்.
சங்கர்: இந்த PET பாட்டில்களை நீங்கள் எறிந்தவுடன், குப்பை சேகரிப்பவர்கள் அவற்றை எடுத்து மண்டிகளில் கொடுக்கிறார்கள். அங்கு எங்கள் சப்ளையர்கள் இந்த பாட்டில்களை எடுத்துச் செல்கிறார்கள். பின்னர், அவற்றில் மூடி மற்றும் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றி அழுத்தி சுருக்குகிறார்கள். அதன் பிறகு, அவை சிறுசிறு துண்டுகளாக நசுக்கப்படுகின்றன. இயந்தரத்தின் மூலம் அவை உருக்கப்பட்டு இழைகளாக மாற்றப்படுகின்றன. இது மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் இழை எனப்படுகிறது. இது வழக்கமாக ஆடை தயாரிக்கும் முறையில் நெய்யப்பட்டு, தேவையான வடிவத்தில் வெட்டி தைக்கப்படும்.
கேள்வி 3: உங்கள் நிறுவனம் பிரதமர் மோடியை அணுகியது எப்படி?
சங்கர்: அவரே எங்களைத் தேர்ந்தெடுத்தார்! விதவிதமான ஜாக்கெட்டுகளை நாங்கள் பார்வைக்கு அளித்தோம்.
இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எங்களை அணுகியது. இதற்கு முன், சந்தன நிறத்தில் அதே ஜாக்கெட்டை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு பரிசளித்தோம். அவர் அதை அணிந்தபோது, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதை பிரதமருக்கும் கொடுக்கலாம் என்று விரும்பினார். அதற்குப் பின்னால் நிறைய நெறிமுறைகள் இருந்தன. பல்வேறு விதமான துணிகளை பரிசீலனை செய்தோம். பல சோதனைகளைக் கடந்து, நாங்கள் அவர்களிடம் 9 வண்ணங்களில் ஜாக்கெட்டைக் கொடுத்தோம். அவர்கள் நீலத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
எரிசக்தி வார நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் தலைவர் பிரதமர் மோடிக்கு ஜாக்கெட்டை வழங்கினார். அவர் அதை நாடாளுமன்றத்திற்கு அணிந்தபோது அது வைரலாகிவிட்டது. நாங்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தோம். நான் அப்போது எனது ஊழியர்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்தேன். பிரமதர் அடிந்த ஆடையைப் பார்த்துவிட்டு எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத்தினர் என எல்லோரும் எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்தினர். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம். பிரதமர் மோடி சிறுகுறு நிறுவனங்களின் பணி மீது மதிப்பு வைத்திருப்பவர். அவர் தனது செயலால் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளார். தன் செயல் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முறையின் அவசியம் பற்றிய செய்தியை உலகத்திற்குச் சொல்லி இருக்கிறார். அவர் மிகவும் முனைப்பாக செயல்படும் முற்போக்கான தலைவர். எந்தப் பாராட்டையும் விட அவர் அளித்துள்ள இந்த அங்கீகரம்தான் எங்களுக்கு முக்கியமானது.
முத்தலாக், அயோத்தி தீ்ர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி
கேள்வி 4: இந்தியாவில் பிளாஸ்டிக் பழக்கத்தை எப்படிக் கையாள்வது?
சங்கர்: பிளாஸ்டிக் என்பது பல்வேறு வகைகளில் உள்ளது. அவற்றை ஓரளவு மட்டுமே அகற்ற முடியும். பிளாஸ்டிக் அவசியம், ஆனால் நமக்கு சரியான அகற்றும் முறை தேவை. மக்கள் கழிவுகளைக் கொட்டும்போது வகை பிரித்துக் கொட்டுதில்லை. பிரித்தெடுக்கும் வேலையை குப்பை அள்ளுபவர்களிடம் விட்டுவிடுகிறோம். குப்பைகளைக் கொட்டும் முறைதான் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதில் முக்கிய பிரச்சினை. அதை தொழிற்சாலைகளைக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. பொதுமக்களும் அரசும் செய்யவேண்டும்.
கேள்வி 5: நீங்கள் பணிபுரியும் எதிர்கால திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?
சங்கர்: நாங்கள் ஆன்லைன் விற்பனை செய்கிறோம். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டிலும் விற்கிறோம். சில்லறை விற்பனை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. ஆனால், மறுசுழற்சி ஆடைகள் பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பவேண்டும் என்பதுதான் எங்கள் யோசனை.
உன்னதத் தியாகத்தை ஒருபோதும் மறக்கமுடியாது - பிரதமர் மோடி உருக்கம்