பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தாக்குததில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை ஒருமோதும் மறக்கமுடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டையே துயரில் மூழ்க வைத்த புல்வாமா குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “புல்வாமாவில் இதேநாளில் நாம் இழந்த நமது வீரம் மிக்க நாயகர்களை நினைவுகூர்கிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

வயநாடு எம்பி ராகுல் காந்தி... சொந்த தொகுதிக்கு வருகை புரிந்த நாட்கள் எத்தனை தெரியுமா?

Scroll to load tweet…

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் லெத்போரா என்ற இடத்தில் பகல் 3 மணி அளவில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதி வெடித்துச் சிதறியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது. இத்தாக்குதலில் சிஆர்பிஎப் வாகனத்தில் சென்ற 40 துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். குண்டுவெடிப்பு நடந்தபோது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த அடில் அகமது தார் என்ற இளைஞரும் உயிரிழந்தார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பின் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஷீத் காசி என்ற பயங்கரவாதியை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!