எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஜோடி திருமணம்... உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாகிய பெங்கால் தம்பதி!!
எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜோடி திருமணம் செய்து வாழ்க்கையில் முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் இரு ஆன்மாக்களுக்கு இடையேயான பிணைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.
எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜோடி திருமணம் செய்து வாழ்க்கையில் முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் இரு ஆன்மாக்களுக்கு இடையேயான பிணைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது மணமகனும், மணமகளும் ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவரையொருவர் சந்தித்தனர். மிட்னாபூர் மாவட்டத்தில் பிறக்கும் போதே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இறந்த பிறகு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அதே மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் வசிக்கும் இளைஞரும் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு குழந்தை பருவத்தில் டிப்தீரியா தடுப்பூசி போடப்பட்ட பிறகு வைரஸ் பாதிகப்புக்குள்ளாகியுள்ளார். பயன்படுத்தப்பட்ட ஊசியை போட்டது தான் தனது எச்.ஐ.வி பாதிப்புக்கு காரணம் என்றார் அந்த இளைஞர்.
இதையும் படிங்க: விமான கண்காட்சியில் ‘மாஸ்’ காட்டிய அமெரிக்காவின் B-1B.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா.?
இதனிடையே தற்போது 19 வயதாகும் பெண், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிலையான சிகிச்சையான ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தவறாமல் செல்ல வேண்டியிருந்தது. அதே மருத்துவமனைக்கு இளைஞரும் செல்லும் போது அங்கே இருவரும் சந்தித்துக்கொண்டனர். இதுக்குறித்து அந்த இளைஞர் கூறுகையில், எங்கள் சந்திப்பின் போது நாங்கள் எதிர்கொள்ளும் அவலநிலை மற்றும் முரண்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். எங்கள் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம், நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி, காதலித்தோம். ஒரே நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள், ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். எங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க முடிவு செய்தோம். அந்தப் பெண் தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கழித்தார்.
இதையும் படிங்க: உலகிலேயே ஊழல் நிறைந்தது பிபிசி! இந்தியாவைப் பற்றி நச்சு அறிக்கை! பாஜக பாய்ச்சல்
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பிறகு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கஃபே கடையில் வேலை செய்கிறார். எங்கள் இருவரின் உறவினர்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளும் முடிவை வரவேற்றனர். எங்கள் கனவை நனவாக்க தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் தங்கள் உதவியை வழங்கினர். சோனாரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தம்பதிக்கு உதவ முன் வந்தனர். அவர்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை பரிசாக வழங்கினர் மற்றும் அழைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனின் கவுன்சிலரான அயன் சக்ரபர்த்தியும் தம்பதிக்கு உதவ முன்வந்தார். எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நம் சமூகத்தில் பலர் இன்னும் தூரத்தை கடைபிடிக்கின்றனர். முறையான சிகிச்சை மற்றும் நல்ல நடத்தை எச்.ஐ.வி நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும் என்றார்.